முருகப்பெருமானை வணங்குவோர் நாளும் கோளும் பற்றி கவலை கொள்ள வேண்டாம்.
அருணகிரிநாதர் அருளிய கந்தர் அலங்காரப் பாடல் ஒன்று இதற்கு சாட்சி.இந்தப் பாடலுக்குள்ளேயே இருபத்தி ஏழு நட்சத்திரங்களும் அடங்கி விடுகின்றன.
இந்தப்பாடலின் பொருள்.
நாள் என் செய்யும் - அஷ்டமி, நவமி போன்ற நாள்கள் நம்மை என்ன செய்யும்?
வினை தான் என் செயும்- தீயவினைகள் போன்ற கர்மவினைகள் தான் நம்மை என்ன செய்யும்?
எனை நாடிவந்த கோள் என் செயும்- நவக்கிரகங்களும் நம்மை என்ன செய்யும்?
கொடுங் கூற்றென் செயும்- கொடிய எமன் தான் என்ன செய்ய முடியும்?
குமரேசர் - குமரக்கடவுளாகிய முருகபெருமானின்.

இரு தாளும்- இரு திருப்பாதங்களும்;
சிலம்பும்- பாதத்தில் அணிந்திருக்கும் இரு சிலம்பணியும்;
சதங்கையும்- சலங்கைகள் இரண்டும்;
தண்டையும்- தண்டைகள் இரண்டும்;
சண்முகமும்- ஆறுமுகங்களும்;
தோளும்- பன்னிரண்டு தோள்களும்;
கடம்பும்- மார்பில் ஆடும் கடப்பமலர் மாலையும்;

ஆக இருபத்தேழும் எனக்கு முன்னே வந்து அருள்பாலிக்கும்போது, நான் ஏன் நாளையும் கோளையும் கண்டு பயப்பட வேண்டும் என்கிறார் அருணகிரிநாதர்.
இனிமேல் குரு பெயர்ச்சி, சனி பெயர்ச்சி பற்றியெல்லாம் கவலையில்லை,இருபத்தி ஏழு நட்சத்திரத்தில் எதில் பிறந்திருந்தாலும் கவலைப்படத் தேவையில்லை.
தினமும் இந்த வரியை படியுங்கள்..இனி எல்லா நாட்களும் நல்ல நாட்களே..
முருகன் இருக்க பயமேன்! வேலவன் பாதுகாப்பான்.