திண்டுக்கல் மாவட்டம் ரெட்டியார்சத்திரம் அருகே ராமலிங்கம்பட்டி என்ற கிராமத்தில் பாதாள செம்பு முருகன் கோவில் அமைந்துள்ளது.650 வருடங்களுக்கு முன்பு செய்யப்பட்ட செம்பு முருகன் சிலை,இந்த கோவிலின் கருவறை பூமிக்கு அடியில் 16 அடி ஆழத்தில் உள்ளது. மேலும் திருச்செந்தூர் கோவிலுக்கு அடுத்து, 2வதாக பாதாளத்தில் செம்பு முருகன் அமைந்திருப்பது திண்டுக்கல்லில் மட்டுமே என கூறப்படுகிறது.இவ்விரண்டு இடத்திலும் இறங்கி பின்பு மேலே ஏறுவது போல் உள்ளது. கீழே இருப்பவர்களோ முருகன் வாழ்க்கையில் முருகன் தூக்கி உயரத்தில்விடுவதாக அர்த்தம் என்கிறார்கள்.
இந்த புகழ் வாய்ந்த பாதாள செம்பு முருகன் கோவில் திண்டுக்கல் மாவட்டம் ரெட்டியார்சத்திரம் அடுத்த ராமலிங்கம்பட்டி போகர் நகரில் அமைந்துள்ளது.
போகர் நகர், இந்த பெயர் வர காரணம் என்ன வென்று பார்த்தால் இந்த பெயருக்கு பின்னாடி தான் இந்த பாதாள செம்பு முருகன் கோவில் உருவான கதையும் இருக்கிறது.நமது பழனி முருகன் நவபாஷாண சிலையை உருவாக்கியவர் போகர் எனப்படும் தமிழ் சித்தர். இவரின் அடுத்த பிறவியாக சொல்லப்படுபவர் தான் திருக்கடையூர் சித்தர். இவர் தங்கம், வெள்ளி, செப்பு, இரும்பு, ஈயம் போன்ற பஞ்சலோகங்களை வைத்து முருகன் சிலையை செய்து பாதாளத்தில் வைத்து வழிபட்டு வந்தார். இப்படி இந்த திருக்கடையூர் சித்தரின் வம்சா வழியாக வந்த சித்தர்களின் வாரிசுகள் தான் இந்த கோவிலை மேம்படுத்தி இன்று இந்த பாதாற செம்பு முருகன் கோவில் இந்த அளவு வளர்ந்து இருக்கிறது. அன்று திருக்கடையூர் சித்தர் செய்த பஞ்சலோக 650 வருட பழைய முருகன் சிலையை நீங்கள் இந்த கோவிலில் பார்க்க முடியும்.
சிறப்பு அம்சங்கள்:
இந்த கோவிலுக்குள் நீங்கள் நுழையும் போதே 12 அடி உயரத்தில் கிழக்கு நோக்கிய கோவிலின் முன்புறம் காவல் தெய்வமான சங்கிலி கருப்பசாமி 15 அடி உயரத்தில் கம்பீரமாக காட்சியளிக்கிறார். உலகத்திலேயே முருகன் கோவிலில் சங்கிலி கருப்பன் சிலை இருப்பது இங்கு மட்டும்தான். இந்த சங்கிலி கருப்பனை நாம் பூஜை செய்து முடிந்து வந்தால் கோவிலின் முன்பாக அருகே குளம் போல் நீர் நிரம்பி உள்ள இடத்தில் ஜலகண்டேஸ்வர் நமக்கு காட்சி தருகிறார், ஜலகண்டேஸ்வரர் என்பவர் தண்ணீரிலேயே நமக்கு காட்சி தரக் கூடியவர் அதற்காகத்தான் இவரை ஜலகண்டேஸ்வரர் என்று நான் அழைக்கிறோம். இவரை தாண்டி நாம் அப்படியே கோவிலுக்குள் செல்லும்போது காலபைரவரையும் காணலாம் கால பைரவரின் தாண்டி 16 அடி ஆழத்தில் உள்ள முருகனை காண 18 படி கொண்ட குகையில இறங்கி சென்றால் இங்கு நாம் முழுக்க முழுக்க செம்பினால் செய்யப்பட்ட பாதாள செம்பு முருகர் காட்சி அளிப்பார். அவரின் அருகிலேயே 650 வருடம் பழைய திருக்கடையூர் சித்தர் உருவாக்கிய சிறிய முருகன் சிலை இருக்கும்.
திருவிழாக்கள்:
இங்கு செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளிலும்,சஷ்டி,கிருத்திகை உள்ளிட்ட முருகனுக்கு உகந்த நாட்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்று வருகிறது.சங்கிலி கருப்பு சாமிக்கு அமாவாசை நாளில் விசேஷ வழிபாடு நடைபெறுகிறது. கால பைரவருக்கு தேய்பிறை அஷ்டமி நாளில் சிறப்பு வழிபாடு நடைபெறுகிறது. தைப்பூசம், பங்குனி உத்திரம், வைகாசி விசாகம், கந்தசஷ்டி, சித்திரை வருடப்பிறப்பு, சித்ரா பௌர்ணமி போன்ற வருட முக்கிய விரத தினங்களில் அதிகாலை 5 மணி முதல் சிறப்பு அபிஷேக அலங்கார பூஜைகள் நடைபெறுகிறது.
பொதுவாக முருகனை மலை மேல் இருக்கும் குமரன், குன்றத்தின் மேல் இருக்கும் குமரன் என்று கூறுவார்கள். ஆனால் இங்கு பாதாளத்தில் முருகன் இருக்கிறார் திருச்செந்தூருக்கு அடுத்தபடியாக பாதாளத்தில் இந்த பாதாள செம்பு முருகன் கோவில் தான். பொதுவாக நம் முருகன் குடி கொண்டிருக்கும் பெரும்பாலான மலைக் கோவில்களுக்கு செல்லும்போது ஏற்றமாகவும் திரும்பி வரும்போது இறக்கமான பாதையாக இருக்கும். ஆனால் இந்த கோவிலில் நாம் முருகனை இறங்கி சென்று தரிசித்து விட்டு ஒரு ஏற்றமான பாதையில் வருவது சிறப்பானது அது நம் வாழ்க்கைக்கும் ஒரு ஏற்றத்தை கொடுக்கும் என அனைவராலும் நம்பப்படுகிறது. இந்த கோவிலுக்கு 9 வாரங்கள் தொடர்ந்து வந்தால் நீங்கள் நினைக்கும் காரியங்கள் எல்லாம் கைகூடி வரும் என இங்கு வந்து பயன் அடைந்த பலர் கூறுகிறார்கள். இந்த கோவிலில் நவகிரகங்களால் நமக்கு உண்டாகக்கூடிய தோஷங்கள் கஷ்டங்கள் அனைத்தையும் இந்த பாதாள செம்பு முருகன் போக்கி விடுவார். செவ்வாய்க்குரிய தெய்வமாக முருகன் திகழுகிறார் அதனால் அரசு வேலையில், காவல்துறை சம்பந்தமான வேலைகள், ராணுவம் சம்பந்தமான வேலைகளில் பதவி உயர்வு, சம்பள உயர்வு வேண்டி இங்கு வந்து முருகனை தரிசித்து செல்கிறார்கள். அவர்களுக்கு வேண்டிய பலனும் உடனே கிடைக்கிறது என்பதால் பல அதிகாரிகள் இந்த கோவிலுக்கு படை எடுத்து வருகின்றனர். இந்த கோவிலின் மற்றொரு சிறப்பாக சொல்லப்படுவது கருங்காலி, செங்கருங்காலி மாலைகள் சொல்லபடுகின்றனர். இந்த கோவிலில் தரப்படும் கருங்காலி மாலையை உங்கள் கழுத்தில் அல்லது உங்கள் கைகளில் எப்போதும் அணிந்தவாறு இருந்தால் உங்கள் வாழ்க்கையில் வெற்றி மட்டுமே வந்து சேரும் என்கிறார்கள். இதற்கு உதாரணமாக தமிழ் நடிகர்கள் தனுஷ், சூரி போன்றவர்கள் தொடர்ந்து வெற்றி படங்களாக குவிப்பதற்கு காரணம் இவர்களை இரண்டு பேரும் கருங்காலி மாலை அணிந்து இருப்பதான் காரணம் என்று பலர் சொல்கிறார்கள். நடிகர் தனுஷ் கூட பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளும்போது அவருடைய கழுத்தில் இந்த கருங்காலி மாலையை நாம் காணலாம். அப்படி இந்த கருங்காலி மாலையில் என்ன சக்தி இருக்கிறது என்று பார்த்தால் இந்த கருங்காலி மரத்தால் செய்யப்பட்ட மாலையை நாம் அணிந்திருக்கும் போது எப்படி பட்ட கெட்ட சக்திகள் ஆக இருந்தாலும் நம்மை நெருங்க முடியாது இந்த சக்திகளை எல்லாத்தையும் நல்லர் சக்திகளாக மாற்றக்கூடிய சக்தி இந்த கருங்காலி மரத்திற்கும் உண்டு. இதை நீங்கள் அணிந்திருக்கும் பொழுது கெட்ட எண்ணங்களுடன் கூடிய மனிதர்கள் உங்களிடம் வந்தால் கூட அந்த கெட்ட எண்ணங்களை தவிர்த்து விட்டு உங்களிடம் நல்லபடியாக பேசுவார்கள் என்று இந்த மாலையை அணிந்தவர்கள் பலரும் கூறுகின்றனர். அந்த அளவிற்கு மிகவும் சக்தி வாய்ந்த மரம் தான் இந்த கருங்காலி. இந்த கருங்காலி மாலையை முதில் இந்த பாதாள செம்பு முருகன் கோவிலில் தான் அறிமுக படுத்தினார்கள்.இங்கு கொடுக்கப்படும் மாலை மிகவும் பிரபலமானது.
பாதாள முருகன் கோயில் எங்கு உள்ளது?
திண்டுக்கல் மாவட்டம் ,இராமலிங்கம்பட்டி
ஓம் பாதாள செம்பு முருகன் திருக்கோயில் முகவரி :
இராமலிங்கம்பட்டி ஓம் பாதாள செம்பு முருகன் திருக்கோயில்,
இராமலிங்கம்பட்டி,
திண்டுக்கல் மாவட்டம் – 624622.
பாதாள செம்பு முருகன் கோவில் timings
Morning 6AM to 2PM and Again Opens at 4PM to Night 8PM
நடை திறப்பு நேரம்
காலை 6 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை...
மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை...
நடை அடைப்பு நேரம்
பிற்பகல் 2 மணி முதல் 4 மணி வரை...
இது அனைத்து நாட்களுக்கும் பொருந்தும் ....!
பாதாள செம்பு முருகன் கோவில் செல்லும் வழி:
பாதாள செம்பு முருகன் கோவில் bus route
Bus Route:
அருகிலுள்ள பேருந்து நிலையம்
இராமலிங்கம்பட்டி,திண்டுக்கல்
Train Route:
அருகிலுள்ள இரயில் நிலையம்
திண்டுக்கல்
Air Route:
அருகிலுள்ள விமான நிலையம்
மதுரை
https://maps.app.goo.gl/cw6oAmENuumANDZg8
திண்டுக்கல் பாதாள முருகன் கோவில்