எண்கண் வேலவன் தல வரலாறு | Engan Murugan Temple Histroy

sathiya 664 16/1/2024
 எண்கண் வேலவன் தல வரலாறு | Engan Murugan Temple Histroy

எண்கண் முருகன் கோயில் தமிழ்நாடு திருவாரூர் மாவட்டத்தில் திருவாரூரிலிருந்து 13 கிலோமீட்டர் தொலைவில் உள்ள எண்கண் கிராமத்தில் உள்ள எண்கண் பிரம்மபுரீசுவரர் கோயிலில் ஒரு தனி சன்னதியாக உள்ள கோயிலாகும்.இது ஒரு சிவ ஆலயம். இங்கு முருகப்பெருமானே பிரதான தெய்வமாக இருக்கிறார். எண் என்பது 8 என்ற கணக்கை குறிக்கின்றது. நான்கு தலைகளை கொண்ட பிரம்மனுக்கு எட்டு கண்கள். பிரம்மன் சிவனை நினைத்து இத்தலத்தில் வழிபட்டதால் இதற்கு எண்கண் என்ற பெயர் வந்தது.

பெயர்க்காரணம்:
சிக்கலில் கட்டை விரலையும், எட்டுக்குடியில் கண்ணையும் இழந்த சிற்பி கண்ணில்லாது இருப்பினும் கட்டை விரலில்லாது இருப்பினும் மயில்மேல் ஏறும் வேலவனுக்கு மயிற்காலே ஆதாரமாகக்கொண்டு எண்ணமே கண் முருகனுக்கு சிலை வடித்ததால் எண்கண் எனப் பெயர் பெற்றது. (எண்ணமே - க்ண்: எண் - கண் : எண்கண்.) மேலும் அச்சிற்பி வேலவனுக்கு சிலை அமைத்து முடியும் தருவாயில் அருகில் உதவி செய்த பெண்மணியின் கையில் உளிபட்டு ரத்தம் பீறிட்டது. பீறிட்ட ரத்தம் சிற்பியின் கண் களில்பட்டு பளீரெனத் திறந்து பார்க்கும் சக்தியைப் பெற்றது. உடனே எண்கண் கொடுத்த வேலனே எனச் சிற்பி பாடினான் இதனாலும் எண்கண் எனப் பெயர் பெற்றது.

தல புராண வரலாறுகள் :
ஸ்ரீ சண்முகப் பெருமான் மாமுனிவர்களுக்கு பஞ்சாக்ஷர உபதேசம் செய்தபின் அம் முனிவர்கள் வேண்டுகோள்படி . தனது திருவுருவை விசுவகர்மனால் பஞ்சலோகத்தில் ஒன்றும், சிலா ரூபத்தில் ஒன்றும் மனோநிர்மாணமாக செய்ய உத்திர விட்டபடி க்ஷேத்திர மகாத்மியம் பிருமாண்ட புராணம் சிவ க்ஷேத்திர காண்டம் உப பாகம் 66-வது அத்தியாயம் முதல் .. 72-வது அத்தியாயம்வரை இந்த க்ஷேத்திரம்பற்றிச் சொல்லப் பட்டிருக்கிறது. இந்த க்ஷேத்திரம் துவாதசாந்த க்ஷேத்திரம். மானாமதுரைக்கு நிகரானதென்று சொல்லப்படுகிறது.


முருகப் பெருமான் சிறுவனாக இருக்கும்போது சிருஷ்டி கர்த்தா பிர்மாவுக்கு "ஓம்" எனும் பிரணவ மந்திரம் தெரியாத. தால் சிருஷ்டித் தொழிலையும் வாங்கிக் கொண்டு சிறையில் அடைத்துவிட்டார். சிவபிரானே வந்து கேட்டதற்கும் அவரை சிறையிலிருந்து விடுதலை செய்யாமல் சிவபிரானுக்கே மந்திரம் போதித்து தகப்பன் சுவாமியானார். பிறகு தனது கருணை விழி யால் பிர்மாவை விடுதலைசெய்தார். பிர்மா சிருஷ்டித் தொழில் கிடைக்கவேண்டி தவம் செய்து ஊர் ஊராக வருங்காலையில் இவ்வூரில் சகல ஆன்மாக்களுக்கும் உய்யும்பொருட்டு வந்த எம்பிரான் பிர்மாவுக்கு சிருஷ்டித் தொழில் அளித்து பிரமபுரீஸ்வரரானார்.
சூரபத்மன் எனும் அரசனொருவன் தேவர்களை அழித்து இந்திரனிடமிருந்து பதவியையும், அமராவதி நகரையும் பெற்றுக் கொண்டான். அஞ்சிய தேவர்கள் சிவனிடம் வந்து இறைஞ்சினர். அப்போது சிவன் தவமியற்றிக்கொண்டிருந் தார். பர்வதகுமரி மதுரையில் அரசனின் மகளாக வளர்ந்து வந்தார். மன்மதன் பானம் தொடுத்து சிவனின் தவம் கலைத்து, சிவனுக்கும், பர்வதகுமரிக்கும் திருமணம் செய்வித்தான். பின்பு சிவனாரின் நெற்றிக் கண்ணிலிருந்து எழுந்த ஜ்வாலையில் முருகன் பிறந்தார். தக்க பருவம் வந்ததும், சக்தி பூஜை செய்து கொடுத்த சக்திவேலைப் பெற்றுக் கொண்ட கார்த்தி கேயன் சிங்க முகனையும். பானுகோபனையும் ஒழித்து, பின் வந்த சூரபத்மனையும் கொன்று இரு கூறாக்கினார். ஒரு பகு தியை மயிலாக்கித் தன் வாகனமாகவும், மற்றொரு பகுதியை சேவ்லாக்கித் தன் கொடியாகவும் கொண்டார். இவ்வாறாக அசுரர்களை அழித்த பின்னர் இந்திரனுக்கு மீண்டுமப்பதவியை யும் அமராவதி நகரையும் அளித்து மீண்டும் எண்கண் வந்து அமர்ந்தார். இதைத்தான் அருணகிரிநாத சுவாமிகளும் 'இந்திரன் பதம்பெறு அண்டர்தம் பயம் கடிந்தபின்பு எண்கண் அங்கு அமர்ந்து இருந்த பெருமானே' என்றார்.

சிம்மவர்மன் எனும் அரசனொருவன் பிருகு முனிவருடைய கோபத்திற்கு ஆளாகினான். அவர் அவனைச் சிங்கமாக மாறும் படி சாபமிட்டுவிட்டார். சாப விமோசனம் எவ்வாறு என அவன் கேட்க ‘தை மாதத்து பூர்ணிமை கூடிய பூச விண்மீன் கூடிய நன்னாளில் விருத்தக் காவிரி தீர்த்தத்தில் மூழ்கி ஆறு முகனை வழிபடு' என்றார். அதுபடியே அவனும் தை மாதத்து பூர்ணிமை கூடிய பூச விண்மீன் கூடிய நன்னாளில் விருத்தக் காவிரி தீர்த்தத்தில் மூழ்கி சண்முகனைத் துதித்தான். முருக னும் அவனுக்கு வள்ளி தேவசேனா சமேதரராக மயூர வாகன மேறி காட்சி தந்தருளினார்.

சோழ மன்னர்களின் ஆட்சி சிறப்புற்று விளங்கிய காலத் தில் பல சிவ. விஷ்ணு ஆலயங்கள் தோன்றின. அக்காலத் தில் கலைகள்யாவும் தெய்வீகத்தில் இணைந்து, மக்களின் வாழ்க் கையை வளமடையச் செய்தன. முத்தரச சோழன் என்பான் பல கலைகளில் தேர்ச்சி பெற்று விளங்கினான். அவன் எட்டு குடிக்கு மேற்கில் ஒரு நகரம் அமைத்துக்கொண்டு, நீதிமுறை. தவறாமல் அரசாண்டு வந்தான். அந் நகரில் தெய்வாம்சம் பொருந்திய சிற்பி ஒருவன் வாழ்ந்து வந்தான். அவன் முருக னிடம் அளவிலாத பக்தி பூண்டவன். அவன் சிக்கலில் உள்ள சிங்காரவேலவரைச் செய்து முடித்திருந்தான். இம்மாதிரி. சிலை வேறு இடங்களில் ஏற்படக் கூடாதென்று அவன் வலக்கை கட்டைவிரலை தானமாகக்கேட்டு பெற்றுக் கொண் டனர். கை விரலை இழந்தாலும் சிற்பி மனம் தளராமல் முரு கனைத் துதித்துக் கொண்டிருந்தபோது எட்டுகுடியில் சிலை செய்ய அவனுக்கு கனவில் உத்தரவு கிடைத்தது உடனே எட்டுகுடியிலும் அழகுடன் ஆறுமுகனைப் படைத்தான். இம் மாதிரி சிலை வேறு இடங்களில் ஏற்படக் கூடாதென அவ னுடைய இரு கண்களையும் குருடாக்கி விட்டனர். சிற்பி தன க்கு உணவளித்து வந்த ஒரு பெண்மணியுடன் எண்கண் எனும் பெயர் பூண்ட கிராமத்தை அடைந்தான். எப்பொழு தும் முருகனையே தியானம் செய்து வருகையில் இவ்வூரிலும் முருகன் சிலை வடித்து கோயில்கட்ட கண்ணில்லாத சிற்பிக்கு மயிலோனின் உத்தரவு பிறந்தது, வேலை தொடங்கியது. இரவு பகல் பாராது முருகனையே தியானித்து அவனுடைய நாமத்தை ஜபித்துக்கொண்டு ஒப்புயர்வில்லா மயில்மீது அம ரும் மூர்த்திக்கு மயில் கால்களே ஆதாரமாகக் கொண்டு அமைத்து, பார்ப்பவர் மனதைக் கவரும் வண்ணம் செய்து முடித்தான். அவ்வாறு முடிக்கும் தருவாயில் அருகில் உதவிபுரிந்து வந்த பெண்மணியின் கைவிரலில் உளி பட்டு ரத்தம் பீறிட்டது. பீறிட்ட ரத்தம் சிற்பியின் இரு கண்களிலும் தெறித் தது. பளீரென்று கண்கள் திறந்து ஒளிபெற்றன. உடனே "எண்கண் கொடுத்த வேலனே" எனச் சிற்பி பாடினான்.

கோவிலின் அமைப்பு முறை:
இத் திருக்கோயில் ஊரின் கடுவே கிழக்கு நோக்கி அமைந்து உள்ளது. நடு மண்டபம் ஒரு திருச்சுற்றலை (பிர காரம்) மட்டும் கொண்டது. ராஜகோபுரம் கிழக்கு வாயிலின் இருக்கிறது. இக்கோவில் நான்கு வாயில்களைக் கொண்டிராது. இருப்பினும் இரு வாயில்களைக் கொண்டுள்ளது. கிழக்கு வாயில் ஒன்று மற்ருென்று தெற்கு வாயிலாகும். நடுமண்ட பத்தின் உள்ளே கிழக்கு நோக்கியவாறு பிரமபுரீஸ்வரர் இருக் கிறார். இறைவருடைய கர்ப்பக்கிருக வாயிலில் இரு துவார பாலகர்கள் இருக்கின்றனர். இறைவருடைய கர்ப்பக் கிரகத் துங்கு கிழக்காக தெற்கு நோக்கியவாறு ஆறுமுகப் பெருமான் அள்ளி தேவசேனா சமேதராக மயில்மீது விற்றிருக்கிருர். முருகப் பெருமானின் கர்ப்பக்கிரகத்துக்கு கிழக்காகவும் தெற்கு நோக் கியவாறும் சண்முகநாதர் தேவசபை இருக்கிறது. இதில் இரு க்கும் சண்முகநாதரின் ஆறுமுகங்களுக்குரிய காதிலும் தனித் தனியே கடுக்கன் போட்டு எடுத்துவிடலாம். ஆறுமுகனுக்குப் பின்புறத்தில் மந்திரத் தகடு ஒன்று பொறிக்கப்பட்டுள்ளது. சண்முகநாதர் தேவசபைக்கு கிழக்காகவும் தெற்கு நோக்கிய வாறும் இறைவியார் தமது கர்ப்பக்கிரகத்திலுள் இருக்கிறார். தேவசபைக்கு தெற்காகவும், கிழக்கு நோக்கியவாறும் ருத்திரா பதீஸ்வரர் இருக்கிறார். தேவசபைக்கும் இறைவியார்க்கும் இடையே நடராஜப் பெருமான், சிவகாமி அம்மையுடன் இருக் கிறார். நடராஜருக்கு முன்பாக கலி (சனீஸ்வர | பகவான் இருக்கிருர்.
திருச்சுற்றலையில் துவஜஸ்தம்பம் (கொடிமரம்) தெற்குக் கோபுர வாயிலுக்கு நேர் எதிரிலும் ஆறுமுகளின் கர்ப்பக் திரகத்திற்கு நேர் எதிரிலும் உள்ளது. திருச்சுாலையில் பீர்ம புரீஸ்வரரின் கர்ப்பக்கிரகத்தின் தெற்குச் சுவரில் சற்றுமுன் எழும்பிய மண்டபத்தில் தெட்சிணாமூர்த்தி காட்சி தருகிறார். தெட்சணாமூர்த்திக்கு அருகில் விஜயகர் கிழக்கு நோக்கியவாறு தனி மண்டபத்தில் காட்சி தருகிறார். பிர்மபுரீஸ்வரரின் கர்ப் பக்கிருகத்தின் பின்புறச் சுவரில் அர்த்த நாரீஸ்வரரும் அவ ருக்கு எதிரில் சாஸ்தா (ஐயப்பன்) வும் காணப்படுகின்றனர். கோவிலின் வடமேற்கு மூலையில் பாலசுப்ரமணியம் தனிமண்ட பத்தில் கிழக்கு நோக்கியவாறு காட்சி தருகிறார். பிரமபுரீஸ் வரரின் காப்பக்கிருகத்தின் வடபாகத்துச் சுவரில் பிர்மாவும், துர்க்கா தேவியும் காணப்படுகின்றனர். துர்க்கைக்கு அருகா மையில் தனி மண்டபத்தில் தெற்கு நோக்கியவாறு சண்டி கேஸ்வரர் காட்சி தருகிறார். கோவிலின் வடக்குப் பிரகாரத் தில் ஒரு நீண்ட மண்டபம் காட்சி தருகிறது, அதன் கிழக்கு மூலையில் உற்சவ காலங்களில் யாகங்கள் செய்வதற்காக ஒரு அறை இருக்கிறது. கோவிலின் வடகிழக்கு மூலையில் காசி விஸ்வநாதரும், அவருக்கு அருகாமையில் நவக்கிரகம், பைரவர், அண்ணுமலையார், பாணம் முதலியோரும் காட்சி தருகின் றனர். தெற்குக் கோபுர வாயிலுக்கு நேர் தெற்கே குமர தீர்த் தம் இருக்கிறது. அதன் அருகில் இடும்பன் இருக்கின்றார்.


சுற்றுப்புற கோயில்கள் :
இக்கோவிலின் தெற்குப்புறத்தில் பழைய கோயிலொன்று . உள்ளது. இக்கோவில் கட்டப்படு முன்பு அதுவே இவ்வூரின் முக்கிய கோவிலாக இருந்தது. அங்கும் இறைவனும். இறைவி யாரும் சண்முகனுடன் அருட்டிறம் காட்டுகின்றனர் கோவி லுக்கு தெற்கே கோவிலை ஒட்டினாற்போல் ஒரு பெருமாள் கோவிலும் உள்ளது. கோவிலுக்கு வடக்கே மாரியம்மன் கோவில் ஒன்று உள்ளது. கோவிலுக்கு கிழக்கே காளியம்மன் கோவில் ஒன்று உள்ளது.