சனி பிரதோஷத்தின் முக்கியத்துவம் | Significance of Shani Pradosha

sathiya 47 02/4/2024
 சனி பிரதோஷத்தின் முக்கியத்துவம் | Significance of Shani Pradosha

இந்த வருடத்தின் வரும் முதல் சனி பிரதோஷம் (06-04-2024) பங்குனி மாதம் 24 தேய்பிறை சனி பிரதோஷம்.

ஆன்மீகத்தை பொறுத்தவரை அமாவாசை, பௌர்ணமி, கார்த்திகை, பிரதோஷம் மற்றும் சஷ்டி ஆகிய நாட்கள் மிகவும் சிறப்புமிக்க நாட்களாக கருதப்படுகிறது. அந்த வகையில் பார்த்தால் இவற்றை எல்லாம் விட சனி பிரதோஷம் ஆனது எண்ணற்ற நன்மைகளை கொண்டுள்ள ஒரு நாளாக கருதப்படுகிறது.சனிக்கிழமையும் பிரதோஷமும் சேர்ந்து அமைந்துள்ளதால் இது சனி மஹா பிரதோஷம் என சிறப்பாகக் கூறப்படுகிறது.

இந்தநாளில், சிவனாருக்கும் நந்திதேவருக்கும் விசேஷமான பூஜைகள் நடைபெறும். அபிஷேக ஆராதனைகள் நடைபெறும். அப்போது பதினாறு வகையான அபிஷேகப் பொருட்களைக் கொண்டு அபிஷேக ஆராதனைகள் நடைபெறும். பால், தயிர், சந்தனம், தேன், திரவியப்பொடி முதலான பொருட்களைக் கொண்டு அபிஷேகம் செய்வார்கள்.
பிரதோஷ அபிஷேகத்துக்கு, பொருட்கள் வழங்கினால், நூற்றி எட்டு பிரதோஷம் தரிசனம் செய்த புண்ணியம் கிடைக்கும் என்பது ஐதீகம்.

ஒருவர் ஜாதகத்தில் எந்த கிரஹத்தின் தசா புத்தி நடந்தாலும் சனி பிரதோஷம் அன்று கோயிலுக்குச் சென்று சிவனாரை, தென்னாடுடைய சிவனை வழிபடுவது அனைத்து கிரஹ தோஷங்களையும் போக்கும் சிறப்பு மிக்கதாகும். ஏழரை சனி, அஷ்டம சனி, அர்த்தாஷ்டமச் சனி மற்றும் சனி தசை, புத்தி நடப்பவர்கள் சனியினால் வரும் துன்பத்தைப் போக்க கட்டாயம் சனி பிரதோஷத்திற்கு சென்று சிவதரிசனம் செய்ய வேண்டும். சனி பிரதோஷத்தன்று கோயிலுக்குச் சென்றால் 120 வருடம் பிரதோஷத்திற்குக் கோயிலுக்குச் சென்ற பலன் கிடைக்கும் என்கிறது சிவாகமம் என்னும் நூல்.எனவேதான் இதனை சனி மஹா பிரதோஷம் என்றே கூறுவார்கள். சனிக்கிழமை பிரதோஷம் அத்தனை மகத்துவம் வாய்ந்தது.


சனி பிரதோஷத்தின் முக்கியத்துவம்:

இந்தநாளில், சிவனாருக்கும் நந்திதேவருக்கும் விசேஷமான பூஜைகள் நடைபெறும். அபிஷேக ஆராதனைகள் நடைபெறும். அப்போது 16 வகையான அபிஷேகப் பொருட்களைக் கொண்டு அபிஷேக ஆராதனைகள் நடைபெறும். பால், தயிர், சந்தனம், தேன், திரவியப்பொடி முதலான பொருட்களைக் கொண்டு அபிஷேகம் செய்வார்கள்.பிரதோஷ அபிஷேகத்துக்கு, பொருட்கள் வழங்கினால், 108 பிரதோஷம் தரிசனம் செய்த புண்ணியம் கிடைக்கும் என்பது ஐதீகம்.

இந்து புராணங்களின்படி, சனிக்கிழமை என்பது சனி பகவானுக்கு (கிரக சனி) அர்ப்பணிக்கப்பட்ட நாள். உங்கள் ஜாதகத்தில் உள்ள அவரது நிலையின் அடிப்படையில் அவர் பெரும்பாலும் கர்மா மற்றும் பிரச்சனைகளுடன் தொடர்புடையவர். நம் வாழ்வில் அவர் கொண்டு வரக்கூடிய பாதகமான விளைவுகளுக்காக எல்லோரும் அவரைப் பயப்படுகிறார்கள். இறைவனை சாந்தப்படுத்தவும், இத்தகைய தீமைகளைத் தவிர்க்கவும், மக்கள் பொதுவாக சனிக்கிழமைகளில் சனி பகவானுக்கு விரதம் இருப்பார்கள். ஒரு சனிக்கிழமையில் பிரதோஷம் வரும் போது, ​​அந்த நாளில் சிவன் மற்றும் சனி இருவரையும் வணங்குவது மேலும் தெய்வீகத்தன்மையை சேர்க்கிறது.


சனி பிரதோஷ வழிபாடு:

சனி பிரதோஷத்தில் நாம் நந்தி பகவானையும், சிவ பெருமானையும் வணங்கினால் நாம் இந்த ஜென்மத்தில் செய்த பாவங்கள் மட்டுமல்லாமல். முந்தைய பிறவிகளில் செய்த பாவங்களும் தீர்ந்துவிடும் என்பது நம்பிக்கை. சனிப்பிரதோஷத்தில் சிவபெருமானை எப்படி வழிபட வேண்டும், அதனால் என்ன பலன்க் கிடைக்கும் என்பதை இங்கு பார்ப்போம்...

இதே போல் சனிக்கிழமைகளில் வரக்கூடிய பிரதோஷ நிகழ்வுக்கு அதிக முக்கியத்துவமும், மகத்துவமும் இருப்பதாக பார்க்கப்படுகிறது.நந்தியெம்பெருமானின் கொம்புகளுக்கிடையே சிவன் ஆடும் நேரமே பிரதோஷம் என்பதால் அன்று நந்தியின் கொம்புகளுக்கிடையே சிவனை தரிசிப்பது சிறப்பு தரும்.சனி பிரதோஷத்தில் நாம் நந்தி பகவானையும், சிவ பெருமானையும் வணங்கினால் நாம் இந்த ஜென்மத்தில் செய்த பாவங்கள் மட்டுமல்லாமல். முந்தைய பிறவிகளில் செய்த பாவங்களும் தீர்ந்துவிடும் என்பது நம்பிக்கை.

சனி பிரதோஷத்தன்று காலையில் இருந்து மாலை நேரம் வரை எதுவும் சாப்பிடாமல் விரதம் இருக்க வேண்டும். அதன் பிறகு மாலை நேரங்களில் பிரதோஷ தரிசனம் செய்தால் நினைத்த காரியம் விரைவில் கைக்கூடும் என்பது ஒரு ஐதீகமாக உள்ளது.

இந்த அருமையான தினத்தில் உங்களால் முடிந்தால் தயிர் சாதம் அல்லது எலுமிச்சை சாதம் படைத்து வழிபடலாம். அதே போல் இறைவனை வேண்டி, உணவு தேவைப்படுவோருக்கு தயிர்சாத, எலுமிச்சை சாதத்தை வழங்கினால் சுபிட்சம் ஏற்படும்.

சனி பிரதோஷ விரதத்தை கடைபிடிப்பதால் கிடைக்கும் பலன்கள்:

சிவபெருமானுக்கும் சனிக்கும் சனி பிரதோஷம் அன்று விரதம் கடைபிடிப்பது பின்வரும் ஆசீர்வாதங்களை உங்களுக்கு வழங்கலாம்:

சனிப் பிரதோஷம் 7 1/2 வருடங்கள் சனியின் சஞ்சாரம் அல்லது சனியின் பெரிய/சிறு கிரக காலம் (தசா/புக்தி) ஜாதகத்தில் இருப்பவர்களுக்கு சனி பிரதோஷம் மிகவும் நன்மை பயக்கும்.

  • உங்கள் பாவங்களையும் கெட்ட கர்மாவையும் நீக்குங்கள்
  • உங்கள் மனதையும் உடலையும் சுத்தப்படுத்தி சுத்தப்படுத்துங்கள்
  • சந்ததியினரின் ஆசீர்வாதம் மற்றும் ஆரோக்கியம், செல்வம் மற்றும் செழிப்பு நிறைந்த வாழ்க்கை
  • தொழிலில் முன்னேற்றம் மற்றும் நிதி இழப்புகளில் இருந்து மீட்க உதவுங்கள்
  • பிறப்பு மற்றும் இறப்பு என்ற தொடர்ச்சியான சுழற்சியில் இருந்து மோட்சம் அல்லது விடுதலையை அடைய உதவுங்கள்


சனி பிரதோஷம் மந்திரம்:

இத்தகைய சிறப்பு வாய்ந்த சனி பிரதோஷத்தன்று “ஓம் ஆம் ஹவும் சவும்” என்ற மந்திரத்தை ஒரு சிவாலயத்தில் ஒரு முறை ஜபிப்பதால், நாம் நமது முந்தைய ஏழு பிறவிகள் நமது முன்னோர்கள் ஏழு தலைமுறையினர் செய்த பஞ்சமாபாதகங்கள் அவற்றால் ஏற்பட்ட பாவங்கள் அழிந்துவிடும் என்பது நம் முன்னோர்களின் நம்பிக்கை.

எத்தனை பெரிய துன்பமாக இருந்தாலும் பிரதோஷ காலத்தில் விரதம் இருந்து காராம் பசுவின் கறந்த பாலைக் கொண்டு சிவனையும், நந்தி பகவானையும் அபிஷேகம் செய்து வில்வ இலை, சங்குப்பூ வைத்து வழிபட்டால் பூர்வ ஜென்ம கர்ம வினைகளும், நாம் செய்த பாவங்களும் நீங்கி சிறப்பான பலன் கிடைக்கும்.