அக்ஷய திரிதியை 2024 எப்போது? | தங்கம் வாங்க நல்ல நேரம்? 2024 Akshaya Tritiya Date? Akshaya Tritiya

sathiya 58 30/4/2024
 அக்ஷய திரிதியை 2024 எப்போது? | தங்கம் வாங்க நல்ல நேரம்? 2024 Akshaya Tritiya Date? Akshaya Tritiya

அட்சய திரிதியை:

அக்ஷய திரிதி என்றாலே அனைவருக்கும் நினைவில் வருவது தங்கம் வாங்குவது தான். சித்திரை மாதத்தில் அமாவாசைக்குப் பின் வரும் வளர்பிறை திருதியையே அட்சயதிருதியை. அட்சயம் என்றால் தேயாது, குறையாது, வளர்தல் என்று பொருள்.இன்று தங்கம், வெள்ளி போன்ற பொன் பொருள் ஆபரணங்கள் வாங்கினால், செல்வம் பெருகும் என்று மக்கள் கருதுகின்றனர். 
அக்ஷய திரிதியை அன்று தங்கம், சொத்துக்கள் வாங்கும் வழக்கம் இந்தியாவில் மட்டுமல்ல நேபாளத்திலும் உண்டு.

அட்சய திரிதியை அன்று இறைவனை வழிபட நாம் கனவிலும் நினைத்துப் பார்க்காத பல நல்ல பலன்களை  அடையலாம்.இந்துக்களின் மிக முக்கியமான பண்டிகை நாட்களில் ஒன்றாக அக்ஷய திரிதியை உள்ளது. இது செல்வ வளம் மற்றும் புதிய ஆரம்பத்திற்கான நாளாக கருதப்படுகிறது. அதனால் இந்த நாள் செல்வத்திற்கு அதிபதியாக இருக்கும் மகாலட்சுமிக்கும், அவரது பதியான திருமாலுக்கு உரிய நாளாக கருதப்படுகிறது. அக்ஷய திரிதியை அன்று நாம் செய்யும் வழிபாடுகள் அனைத்து விதமான துன்பங்கள், கஷ்டங்கள் ஆகியவற்றை நீக்கி, மகிழ்ச்சியான, நிறைவான வாழ்க்கையை தரும் என்பது நம்பிக்கை. அதனால் இந்த நாளில் மகிழ்ச்சி மற்றும் செல்வ வளம் வேண்டி ஒவ்வொரு ஆண்டும் மக்கள் வழிபாடு செய்கிறார்கள். குறிப்பாக அக்ஷய திரிதியையில் தங்கம் வாங்கினால் ஆண்டு முழுவதும் தங்கம் சேர்ந்து கொண்டே இருக்கும் என்பதால் இந்த நாளில் தங்கம் வாங்கும் பழக்கம் மக்களிடம் உள்ளது.

அக்ஷய திரிதியை 2024 எப்போது?தங்கம் வாங்க நல்ல நேரம்?

அக்ஷய திரிதியையானது ஒவ்வொரு ஆண்டும் சித்திரை மாத வளர்பிறையில் வரும் திரிதியை திதியில் கொண்டாடப்படுகிறது. 2024ம் ஆண்டில் மே 10ம் தேதி வெள்ளிக்கிழமை வருகிறது. அன்று காலை 06.33 மணி துவங்கி, மே 11ம் தேதி காலை 04.56 மணி வரை திரிதியை திதி உள்ளது. மகாலட்சுமிக்கு மங்களகரமான வெள்ளிக்கிழமையில் இந்த ஆண்டு அட்சய திரிதியை வருவதால் இது கூடுதல் சிறப்புடையதாகவும், அதிக முக்கியத்துவம் வாய்ந்த நாளாகவும் கருதப்படுகிறது.

இந்த ஆண்டு அக்ஷய திரிதியை அன்று அபுஜ முகூர்த்தமும் இணைந்து வருகிறது. அன்றைய தினம் நாள் முழுவதும் அபுஜ முகூர்த்தம் உள்ளது. அபுஜ முகூர்த்தத்தில் எந்த காரியத்தை துவங்கினாலும் அது வெற்றி அடையும் என்பது நம்பிக்கை. அதனால் தான் இந்த நாளில் தங்கம் வாங்குவது மிகவும் மங்களகரமானதாக சொல்லப்படுகிறது. தங்கம் வாங்க முடியாதவர்கள் அந்த நாளில் மங்களகரமான பொருட்களை வீட்டிற்கு வாங்கினாலும் உயர்வான பலன் ஏற்படும் என்பது நம்பிக்கை. புராணங்களின் படி, திருமாலின் அவதாரங்களின் ஒன்றான பரசுராமர் அவதாரம் செய்தது அட்சய திரிதியை தினத்தில் தான் என சொல்லப்படுகிறது. அதனால் தான் இந்த நாளில் பெருமாளை வழிபடுவது உயர்ந்த பலனை தரும் என சொல்லப்படுகிறது.

அக்ஷய திரிதியை அன்று வழிபாடு:

அக்ஷய திரிதியை அன்று அதிகாலையில் எழுந்து, குளித்து விட்டு, சுத்தமான ஆடைகளை உடுத்த வேண்டும். பிறகு கோவிலுக்கு சென்றோ அல்லது வீட்டின் பூஜை அறையிலோ விளக்கேற்றி வழிபட வேண்டும். பிறகு மகாலட்சுமியையும், பெருமாளையும் வழிபட வேண்டும். அவர்களுக்குரிய மந்திரங்களை சொல்லி பூஜை செய்ய வேண்டும். அன்றைய தினம் மகாலட்சுமிக்கு நைவேத்தியமாக பால் பாயாசம் செய்து படைப்பது மிகவும் விசேஷமானதாகும். முடியாதவர்கள், எளிமையாக பால் மட்டும் காய்ச்சி வைத்தும் வழிபடலாம்.

மும்மூர்த்திகளில் காக்கும் கடவுளான திருமாலுக்குரிய நாளாக அக்ஷய திரிதியை நாளை இந்து புராணங்கள் சொல்கின்றன. திரேதா யுகம் துவங்கியது இந்த நாளில் தான் என சொல்லப்படுகிறது. பெருமாலின் 6வது அவதாரமாக பரசுராமரின் அவதார தினமும் இதே நாளில் கொண்டாடப்படுகிறது. பல மங்கள நிகழ்வுகள் நடைபெற்ற நாள் என்பதால் இந்த நாளில் தங்களின் வாழ்விலும் மங்களங்கள் நிறைய வேண்டும் என மக்கள் தங்கம், வெள்ளி வாங்குவதற்கான நாளாக இந்த நாளை கருதுகிறார்கள். திரிதியை திதியில் என்ன செய்தாலும் அது பெருகிக் கொண்டே போகும் என்பது ஐதீகம். அதனால் தான் தங்கம் அதிகமாக சேர வேண்டும் என்பதற்காக இந்த நாளில் மக்கள் தங்கத்தை வாங்குவதை வழக்கமாக வைத்துள்ளனர். அதோடு தங்கம், மகாலட்சுமியின் அம்சமாக கருதப்படுகிறது.

 

 

2024 அக்ஷய திரிதியை அன்று வாங்க வேண்டிய மங்களகரமான பொருட்கள் என்னென்ன?

கல் உப்பு,மஞ்சள்,பச்சரிசி,தங்கம்,வெள்ளி