மிலாடி நபி ஏன் கொண்டாடுகிறோம்? அதன் முக்கியத்துவம் என்ன? | Why do we celebrate Milady Nabi?

75 09/9/2023
 மிலாடி நபி ஏன் கொண்டாடுகிறோம்? அதன் முக்கியத்துவம் என்ன? | Why do we celebrate Milady Nabi?

நபிகள் நாயகத்திற்காகவும் அவரின் போதனைகளுக்காகவும் கொண்டாடப்படும் நாள் தான் மிலாடி நபி. இது நபியின் நினைவு தினம் ஆகும்.இது தொடக்க காலத்தில் எகிப்தில் கொண்டாடப்பட்டது. பின்னர், 11 ஆம் நூற்றாண்டில் பிரபலமானது. அந்தக் காலத்தில் ஷியா முஸ்லிம்களின் அப்போதைய ஆளும் பழங்குடியினர் மட்டும் தான் இந்த பண்டிகையைக் கொண்டாடினர், பொது மக்கள் அல்ல. 12-ம் நூற்றாண்டில் மட்டுமே சரியாக மொராக்கோ, துருக்கி மற்றும் ஸ்பெயின் ஆகிய நாடுகள் இந்த பண்டிகையை கொண்டாடத் தொடங்கினர். பின்னர் சில சன்னி முஸ்லீம் பிரிவுகள் இந்த நாளைக் கொண்டாடத் தொடங்கினர்.

மனிதர்கள் தவறான பாதையில் சென்ற காலத்தில் அவர்களை திருத்தி நல்வழிப்படுத்துவதற்காக இறைவனால் அனுப்பப்பட்ட தூதர்கள் ஆகும்.அரபு நாட்டில், வாழ்ந்தவர்களின் நிலைமை மோசமாக இருந்த காலகட்டத்தில் அங்கே குடிப்பதும், பெண் குழந்தைகள் பிறந்தால் கொன்று விடுவதும், சமூக விரோத செயல்கள் நடப்பதுமாக இருந்தது. இது போன்ற பாவமான செயல்களில் ஈடுபட்டிருந்த மக்களை சீர்திருத்தி அல்லாஹ்வால் பூமிக்கு அனுப்பப்பட்ட மாமனிதன் தான் நபிகள் நாயகம்.

நபிகள் நாயகம்:
நபிகள் நாயகம் பிறப்பதற்கு முன்னரே அவரது தந்தை காலமானார். அவரது ஆறு வயதிலேயே தாயும் காலமானார். அதன் பின்பு, சிறிய தந்தை ஹஜ்ரத் அபுதாலிப் பராமரிப்பில் வளர்ந்தார். சிறுவயதிலேயே செல்வாக்குடனும், நற்குணத்துடனும் திகழ்ந்ததால், நபிகள் நாயகத்தை அனைவரும் அல் அமீன் (நம்பிக்கையாளர்) என்றும், அஸ்ஸாதிக் (உண்மையாளர்) என்றும் அழைக்கப்பட்டார்.

சமய வழிபாட்டு பாடல்கள் பாடப்படும்:
இந்த கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக இறை வழிபாட்டு பாடல்கள் பாடி மகிழ்வார்கள். இந்த பாடல்களை பாடுவதும் கேட்பதும் மனிதர்களுக்கு நன்மையை ஏற்படுத்தும். நிகழ்காலத்தில் நன்மையையும் இறந்த பிறகு ஆசீர்வாதத்தையும் கொடுக்கும் இந்த பிரார்த்தனை.

நன்கொடையின் முக்கியத்துவம்:
இஸ்லாமிய மதத்தில் நன்கொடைகளுக்கு அதிக முக்கியத்துவம் உண்டு. உணவு மற்றும் இனிப்புகளை தேவை உள்ளவர்களுக்கு இந்நாளில் வழங்குவது மரபு ஆகும்.

ஊக்கம் தரும் வாழ்க்கை:
இந்த நாளில் பலவித கொண்டாடட்டங்கள் இருந்தாலும் நாம் நபிகள் நாயகத்தின் வாழ்க்கையை பாடமாக எடுத்துக் கொள்ள வேண்டும். வாழ்க்கை முழுவதும் ஒழுக்கத்தை கடைப்பிடித்து அனைவரும் அவரைப் போல நல்வழியில் வாழ வேண்டும்.