தரித்திரம் நீங்கி இல்லத்தில் தெய்வசக்தி அதிகரிக்க மற்றும் குடும்பத்தில் அமைதி நிலவ - To Get rid of poverty and increase divine power in the home

uma 164 09/9/2024
 தரித்திரம் நீங்கி இல்லத்தில் தெய்வசக்தி அதிகரிக்க மற்றும் குடும்பத்தில் அமைதி நிலவ - To Get rid of poverty and increase divine power in the home

 கடைபிடிக்க வேண்டியவை

    *வீட்டில் காலை மாலை இரு வேளையிலும் விளக்கு ஏற்றி வழிபட வேண்டும்.

     * குடும்பத்தில் அனைவரும் ஒற்றுமையாக இறைவழிபாடு மேற்கொள்ள வேண்டும்.    

     * வீடு எப்பொழுதும் நறுமணத்துடன் இருக்க வேண்டும்.   

     * பூஜை அறை மட்டுமல்லாமல் வீடு முழுவதும் சாம்பிராணி, தூபம் போட வேண்டும். 

     * மந்திர ஒலிகள் ஒலிக்கச் செய்வதன் மூலம் ஏற்படும் அதிர்வலைகள் தெய்வ சக்தியை ஈர்க்கும். 

    * பூஜை செய்யும் போது மந்திரங்களைச் சொல்லி வழிபட வேண்டும்.

    * கண்ணாடிக்கு தெய்வசக்தியை அதிகரிக்கக் கூடிய ஆற்றல் உண்டு. அதனால் பூஜை அறையில் கண்ணாடி மாட்டுவதால் குலதெய்வம் அதில் இயங்குவதாக சாஸ்திரங்கள் கூறுகின்றன. 

    * வீட்டிற்கு வரும் சுமங்கலிப் பெண்களுக்கு மஞ்சள், குங்குமம், சிறு கண்ணாடி, வெற்றிலை பாக்கு கொடுக்க வேண்டும்.  

   * வாரத்தில் ஒரு முறையாவது ஆலயங்களுக்குச் சென்று வழிபட வேண்டும். வீட்டில் எவ்வளவு தான் பக்தி சிரத்தையுடன் வழிபட்டாலும் ஆலயத்திற்குச் சென்று வழிபடுவதால் நேர்மறை சக்தி ஊடுறுவுவதை உணரலாம்.

 

செய்யக்கூடாதவை

* உணவுப்பொருட்களை வீணாக்குவது

* அதிக ஒட்டடைச் சேருவது

* தண்ணீரை அதிகம் விரையம் பண்ணுவது

* எச்சில் பாத்திரங்கள் கழுவாமல் அப்படியே கிடப்பது

* அரிசி, உப்பு, எண்ணெய் ஆகியவை முழுவதுமாக காலியாகும் வரை காத்திருப்பது

* உடைந்த, கிழிந்த பொருட்களை அதிகம் பயன்படுத்துவது

* பூஜை அறை சுத்தம் இல்லாமல் இருப்பது

* வீட்டில் துர்வாசனை வீசுவது

* கெட்ட வார்த்தைகள் அதிகமாக உபயோகிப்பது