விநாயகர் சதுர்த்தி என்பது விநாயகப் பெருமானின் பிறப்பைக் கொண்டாடும் ஒரு முக்கியமான இந்து பண்டிகையாகும்.இந்த நாளில்,விநாயகப் பெருமானின் சிலையை எடுத்துச் செல்லும் பிரமாண்ட ஊர்வலங்கள் நடைபெறுகின்றன.
இந்த ஆண்டு விநாயகர் சதுர்த்தி தமிழகத்தில் செப்டம்பர் 18ஆம் தேதியும், வட மாநிலங்களில் செப்டம்பர் 19ஆம் தேதியும் கொண்டாடப்படுகிறது. இத்திருவிழா அன்று தொடங்கி 10 நாட்களுக்கு தொடரும்.இத்திருவிழா ஆண்டுதோறும் ஆவணி மாதத்தின் வளர்பிறைச் சதுர்த்தி நாளன்று கொண்டாடப்படுகிறது.
விநாயகப் பெருமான் அறிவு,ஞானம்,செல்வம் மற்றும் அதிர்ஷ்டத்தின் கடவுளாக வணங்கப்படுகிறார்.மகாராஷ்டிரா, குஜராத்,ஒடிசா,உத்தரபிரதேசம் மற்றும் கர்நாடகா போன்ற பல மாநிலங்களில், விநாயகப் பெருமானின் நினைவாக இந்த திருவிழா வெகு விமர்சையாகவும்,உற்சாகமாகவும் கொண்டாடப்படுகிறது.
விநாயகர் சதுர்த்தி பூஜை தேதி மற்றும் நேரம் :
இந்து நாட்காட்டியின்படி,விநாயக சதுர்த்தி இந்த ஆண்டு 2023 செப்டம்பர் 18 திங்கள் அன்று மதியம் 12:39 மணிக்கு தொடங்கி செப்டம்பர் 19 செவ்வாய் அன்று இரவு 8:43 மணிக்கு முடிவடையும்.
விநாயகர் சதுர்த்திக்கு ஒரு நாள் முன்பு சந்திரனை பார்ப்பதை மக்கள் தவிர்க்க வேண்டும்.
விநாயகர் சதுர்த்தியை எப்படி கொண்டாடுவது:
வினை தீர்க்கும் விநாயகப் பெருமானை வழிபடுவது அவசியம். இங்கு நிறுவப்படும் விநாயகர் சிலைகள் முக்கால் அடியில் இருந்து 70 அடி வரை விதவிதமாக செய்யப்படுகின்றன.
ஒவ்வொருவரும் தங்கள் வீட்டில் சிறிய களிமண்ணால் செய்யப்பட்ட விநாயகர் சிலையை வைத்து பூஜை செய்து , பின்னர் விநாயகர் சிலையை 3 அல்லது 5 நாட்கள் கழித்து நீர்நிலைகள், ஆறு மற்றும் கடலில் கரைப்பது நல்லது.விநாயகருக்கு விருப்பமான அருகம்புல், கொழுக்கட்டை, மோதகம், அவல், பொரி, கடலை, பழங்கள் படைத்து வழிபடுவார்கள்.
சிலை வைக்கப்பட்டுள்ள இடத்தை பல்வேறு அலங்காரப் பொருட்களால் அலங்கரிக்கவும்.விநாயகப் பெருமானை வீட்டிற்கு கொண்டு வர முடியாதவர்கள் கோயில்களுக்குச் சென்று விநாயகப் பெருமானுக்கு லட்டு படைத்து பிரார்த்தனை செய்யலாம்.
கணபதிக்கு மிகவும் பிடித்த இனிப்பு மோதகம் என்று நம்பப்படுகிறது. எனவே, இந்த மோதகம் திருவிழாவின் போது பிரசாதமாக விநியோகிக்கப்படுகிறது.
விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் அல்லது கணேஷ் விசர்ஜன்,2023 ஆம் ஆண்டு செப்டம்பர் 28 (வியாழன்) அன்று நடைபெருகிறது.சிலையின் அளவைப் பொறுத்து நீர்நிலைகள், ஆறு மற்றும் கடலில் கரைக்கப்படுகிறது.
இது அனைத்தும் கணபதி பாபா மோரியாவின் கோஷங்கள்,கீர்த்தனைகள், பஜனைகள், நடனம் மற்றும் பிரசாதம் பூக்கள் விநியோகத்துடன் இருக்கும்.
விநாயகர் சதுர்த்தியின் முக்கியத்துவம் :
சிவபெருமான் மற்றும் பார்வதி தேவியின் மகனாகக் கருதப்படும் விநாயகப் பெருமானை வழிபட மக்கள் கூடுவதால், விநாயகர் சதுர்த்தி மக்கள் மனதில் தனி இடத்தைப் பிடித்துள்ளது.
பொதுவாக, விநாயகப் பெருமானை வழிபடுபவர்களுக்கு எல்லாத் துன்பங்களும், தடைகளும் நீங்கும் என்பது நம்பிக்கை.
நவக்கிரக தோஷம், சர்ப்ப தோஷம், திருமணத் தடை, தொழில் தடை, வறுமை, கடன் தொல்லைகள் எல்லாம் விநாயகப் பெருமானை வணங்கி வர சகல பிரச்சனைகளும் விலகும்.