பௌர்ணமி தினத்தில் முருகன் வழிபாடு அதன் சிறப்புக்களும் | Murugan worship on full moon day

Mageshwari 571 22/10/2023
 பௌர்ணமி தினத்தில் முருகன் வழிபாடு அதன் சிறப்புக்களும்  | Murugan worship on full moon day

பௌர்ணமி என்றால் என்ன?

         பெளர்ணமி என்பது முழு நிலவு வானில் தோன்றுவது ஆகும். இந்த நாளில், நல்ல அதிர்வலைகள் ஏற்படும். அப்பேர்ப்பட்ட சக்தி மிகுந்த நாள் ஆகும். 

      இந்த நாளில்  கோவில் சென்று வழிபடுவது நன்று. பெளர்ணமி நன்னாளில் முருகன் வழிபடுச்செய்தால் வாழ்வில் இதுவரை பட்ட கஷ்டங்கள் அனைத்தும் விலகும் என்றும் முன்னோர்கள் கூறியுள்ளார்கள்.

 வழிப்பாடும் நன்மையும்:
       வீட்டில் விளக்கேற்றி வழிபடுவதால், வீடு மனை முதலான செல்வங்களை வாங்குகிற பாக்கியம் கிடைக்கும். ஒவ்வொரு பெளர்ணமியிலும் மாலையில், சந்திரன் தோன்றும் வேளையில், வீட்டில் சர்க்கரைப் பொங்கல் நைவேத்தியம் செய்து விசேஷமானது. திருமணமான தம்பதிகளுக்கு ஒற்றுமை நிகழும்.

 முருகன் வழிபாடு:
      தமிழ் முதல் மாதமான சித்திரையில் (ஏப்ரல் மாதம் 14 முதல் மே மாதம் 13 வரை) பௌர்ணமி தின விழா ஆகும். பக்தர்கள் முருகக் கடவுளுக்காக விரதம் இருந்து, கடவுளை வழிபடுகிறார்கள். இந்த நாளில் முழு நிலவு இருப்பதால் ஆன்மாக்கள் இருளை அகற்ற உதவுகிறது. எனவே முருகன் வழிபாடு மற்றும் திருவிழா தமிழ் ஆண்டின் முதல் தமிழ் மாதத்தில் இந்த நாளில் தொடங்குகிறது.

  பௌர்ணமியும் அதன் சிறப்புக்களும்:
      பொதுவாக வைகாசி மாதத்தில் பௌர்ணமி விசாக நட்சத்திரத்தில் வருகிறது. இன்றைய தினம் தமிழ் கடவுளான முருகப் பெருமானின் பிறந்த தினமாகவும் கொண்டாடப்படுகின்றன.வைகாசி பௌர்ணமியில் விளக்கு ஏற்றி வழிபட அறிவு மேம்படும். முருகனின் அருளால் ஞானம் கிடைக்கும்.

    பொதுவாக தை மாதத்தில் பௌர்ணமி  பூச நட்சத்திரத்தில் வருகிறது. இன்றைய தினத்தில் சிவன் மற்றும் முருகனுக்கு சிறப்பு வழிபாடுகள் நடத்தப்படுகின்றன.இன்றைய தினத்தில் வழிபாடு மேற்கொள்ள பிறவிப் பயன் நீந்து முக்தி கிடைக்கும். தை பௌர்ணமியில் விளக்கேற்ற ஆயுள் விருத்தி கிடைக்கும்.

    பொதுவாக பங்குனிமாத  பௌர்ணமியானது உத்திரத்தில் வருகிறது. அன்றைய தினத்தில்தான் பார்வதி-பரமேஸ்வரர், முருகன்-தெய்வயானை, ராமன்-சீதை உள்ளிட்ட தெய்வங்களின்  திருமணங்கள் நடைபெற்றன. எனவே பங்குனி பௌர்ணமி வழிபாடு நற்திருமணப்பேற்றினை அருளும். இன்றைய தினத்தில் விளக்கேற்றி வழிபாடு மேற்கொள்ள துன்பங்கள் துயரங்கள் நீங்கி நற்கதி கிடைக்கும்.

பாம்பன் ஸ்ரீமத் குமரகுருதாச சுவாமிகள்:
     ஒவ்வொரு பௌர்ணமியிலும் நள்ளிரவு 12 மணிக்கு முருகப் பெருமான் மற்றும் பாம்பன் சுவாமிகளது விக்கிரகத்துக்கு விசேஷ அபிஷேகங்கள் மற்றும் வழிபாடு நடைபெறுகின்றது. அப்போது பஞ்சாமிர்த வண்ணப் பாடல்கள் இசைக்கப் படுகின்றன. நள்ளிரவு வேளையிலும் ஆயிரக்க ணக்கான பக்தர்கள் கூடுவர்.

பௌர்ணமி நாளில் முருகப் பெருமானை வழிபடுவது எவ்வளவு சிறப்பு என்பதை இதிலிருந்தே புரிந்து கொள்ளலாம்.