கார்த்திகை தீபம் வரலாறு /History of Karthigai Deepam

mageshwari 56 25/11/2023
 கார்த்திகை தீபம் வரலாறு /History of Karthigai Deepam

கார்த்திகை தீபம் வரலாறு

கார்த்திகை மாதத்தில் தீபம் ஏற்றப்படுவது ஏன்?

தமிழர்கள் கொண்டாடிய புராதனப் பண்டிகைகளில் ஒன்று திருக்கார்த்திகை.

விஷ்ணு, பிரம்மா ஆகிய இருவருக்கும் ஜோதி ஒளிப்பிழம்பாய், சிவன் காட்சியளித்த நாள்  ஆகும்.

எல்லா நாளுமே தீபம் ஏற்றி வழிபடுவது சிறப்பானது என்றாலும் கார்த்திகை மாதத்தில் ஆலயங்களில் தீபம் ஏற்றி வைப்பதும், இல்லத்தில் இருவேளைகளில் விளக்கேற்றுவதும் எல்லா மங்களங்களையும் தந்து வாழ்வை சிறப்பாக்குகிறது.

தினமும் விளக்கேற்ற இயலாதவர்கள் துவாதசி, சதுர்த்தசி, பவுர்ணமி ஆகிய மூன்று தினங்களில் மட்டுமாவது கண்டிப்பாக தீபம் ஏற்றுவது நன்று.

விளக்கு ஏற்றும் போது கவனிக்க வேண்டியவை:

நமது கலாச்சாரத்தில் 'விளக்கு' என்பது மிக முக்கியமானது விளக்கை எப்படி ஏற்ற வேண்டும், அதன் தீபம் எப்படி இருக்க வேண்டும் என்பது பற்றியும் கூறப்படுகிறது. இந்த விளக்கை ஏற்றும் போது, அதற்கு விளக்கெண்ணெய், நெய் அல்லது நல்லெண்ணெய் மட்டும்தான் பயன்படுத்த வேண்டும். இதை  உபயோகிக்கும் போது மட்டும் தான், விளக்கின் தீபத்தில் ஓரு ஒளிவட்டம் வெளிப்படுகிறது. இந்த ஒளிவட்டத்தினால் நாம் வசிக்கும் இடம் சுத்தம் சுத்தமாகும் என்று கூறப்படுகிறது.

 

கார்த்திகை தீபம்:

திருக்கார்த்திகை விழாக் கார்த்திகை மாதத்தில்  கொண்டாடப்படுகிறது. இந்த நாளில் சிவஸ்தலமான திருவண்ணாமலையில் மகாதீபம் ஏற்றப்பட்டு கொண்டாடப்படுகின்றன. எனவே, இது சிவன், முருகன் ஆகிய இருவருக்கும் உகந்த நாளாக ஆகும்.

கார்த்திகை தீபம் வரலாறு:

ஒருமுறை பிரம்மாவுக்கும், விஷ்ணுவுக்கும் தங்களில் யார் பெரியவர் என்ற சர்ச்சை ஏற்பட்டது. இருவரும் அவர்களுக்குள் ஒரு போட்டி வைத்தனர்.  உலகாளும் ஈசனான சிவபெருமானின் முடியை பிரம்மா பார்த்து வருவது எனவும், அவரது பாதத்தை விஷ்ணு பார்த்து வருவது எனவும் முடிவு செய்தனர். பிரம்மா அன்னப்பறவை உருவமெடுத்து சிவனின் முடியைக் காண உயரே பறந்தார். விஷ்ணு பன்றி உருவமெடுத்து, பூமியைத் தோண்டி சிவனின் பாதத்தை தேடி பாய்ந்தார். இருவரும் வெற்றி பெறாமல் சிவன் முன் நின்றனர். அப்போது  சிவபெருமான் இருவரிடமும், இவ்வுலகில் யாருமே பெரியவர்கள் இல்லை என்றார். நமது மனதில் இருக்கும் அகங்காரமே இது போன்ற போட்டிகளுக்கு காரணமாகிறது என்றார். இதைக்கேட்ட இருவருக்கும் மனதில் ஒளி பிறந்தது. அப்போது சிவனும் ஜோதி வடிவமாய் காட்சி தந்தார். தங்களுக்கு கிடைத்த இந்த காட்சி அனைவருக்கும் கிடைக்க வேண்டுமென இருவரும் வேண்டினர். கார்த்திகை மாதம், திருக்கார்த்திகை தினத்தில் திருவண்ணாமலையில் ஜோதி வடிவமாக காட்சி தருகிறார்.

கார்த்திகை தீபம் தத்துவம்:

திருக்கார்த்திகை திருவிழா கொண்டாடப் படுவதின் நோக்கம். மக்கள் அனைவரும் அகந்தையுடன்தான் வாழ்கின்றனர். நமக்கும் மேல் ஒருவன் இருக்கிறான்,ஆணவத்துடன் இருப்பவர்களை அவன் பார்த்துக் கொள்வான்  என்ற தத்துவத்தை விளக்க இந்த விழா எடுக்கப்படுகிறது.

திருவண்ணாமலை கார்த்திகை தீபம்:

கார்த்திகை தீபத்தன்று திருவண்ணாமலையில் உச்சியில் தீபம் ஏற்றப்படுகிறது. தீபத்தின் முதல் நாள் பரணி தீபம் ஏற்றப்படுகிறது. இது  முருகனுக்கான வழிபாடு. இரண்டாம் நாள் சிவனுக்காக ஏற்றப்படுகிறது. அன்றைய தினத்தில்தான் உமையாம்பிகைக்கு சிவபெருமாள் தனது உடம்பில் ஒரு பாகத்தை அளித்து அர்த்தநாதீஸ்வரர் உருவெடுத்ததாக வரலாறு உண்டு.

கார்த்திகை தீப சொக்கபனை:

அனைத்து கோயில்களிலும் சிறப்பு பூஜை நடைபெறும். சொக்கபனை கொளுத்தும் நிகழ்ச்சி நடைபெறும். சுட்டகப்பனை எனும் சொல் நாளடைவில் சொக்கபனையாக மருவியுள்ளது. சுட்டகம் என்பது வறட்சி என்பது பொருள். ஓலைகளில் நெருப்பை மூட்டி இறைவனை வழிபடுவதாக வரலாறு ...