கார்த்திகை தீபம் 2023: தீபம் ஏற்றுவதற்கான தேதி மற்றும் நல்ல நேரம் முழு விபரம் | Kartigai Deepam 2023 auspicious time for Deepam Lighting

sathiya 201 21/11/2023
 கார்த்திகை தீபம் 2023: தீபம் ஏற்றுவதற்கான தேதி மற்றும் நல்ல நேரம் முழு விபரம் | Kartigai Deepam 2023 auspicious time for Deepam Lighting

தகார்த்திகை மாதத்தில் கார்த்திகை நட்சத்திரமும்,பெளர்ணமியும் இணைந்து வரக்கூடிய நன்னாளில் திருக்கார்த்திகை தீபம் ஏற்றப்படுவது வழக்கம்.

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் கார்த்திகை தீபத் திருவிழா:

மிகவும் பிரசித்தி திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் கார்த்திகை தீபத் திருவிழா இங்கு கார்த்திகை மாதத்தில் கார்த்திகை நட்சத்திரமும், பூர்ணிமா(பெளர்ணமி)  இணைந்து வரக்கூடிய சுபதினத்தில் திருக்கார்த்திகை தீபம் ஏற்றப்படுவது வழக்கம். இந்த நவம்பர் மாதம் 17ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. நவம்பர் 26ஆம் தேதியன்று மலைமீது பிரம்மாண்ட கொப்பரையில் தீபம் ஏற்றப்படும். தீபத்திருவிழாவிற்காக 60 நாட்களுக்கு முன்பு இருந்தே ஏற்பாடுகள் தொடங்கிவிட்டது.


இந்த விழாவின் முக்கிய நிகழ்வுகள்: 

17 நவம்பர் 2023: கார்த்திகை 1 வெள்ளிக்கிழமைதிருவண்ணாமலையி கொடியேற்றம் நடைபெற்றது.
20 நவம்பர் 2023: (கார்த்திகை 4 திங்கள்) வெள்ளி கற்பக விருட்சம், வெள்ளி காமதேனு வாகனத்தில் ஈசன் வலம்வருதல்.
21 நவம்பர் 2023: (கார்த்திகை 5 செவ்வாய்) வெள்ளி ரிஷப வாகனம்
22 நவம்பர் 2023: (கார்த்திகை 6 புதன்) வெள்ளி ரதம்
23 நவம்பர் 2023: (கார்த்திகை 7 வியாழன்) பஞ்சமூர்த்திகள் மகா ரதம். காலை 7.30 மணிக்கு மேல் 8.30 மணிக்குள் வடம் பிடித்தல்
26 நவம்பர் 2023: (கார்த்திகை 10 ஞாயிறு) பரணி தீபம் காலை 4 மணிக்கு,மாலை 6 மணிக்கு மகா தீபம்.


வீட்டில் கார்த்திகை தீபம் ஏற்ற நல்ல நேரம்: 

நம் வீடுகளிலும் கார்த்திகை தீபம் ஏற்றி வைத்து வழிபடுவது வழக்கம். நாம் அன்றைய தினத்தில் மாலை 5 மணி முதல் 5.30 மணிக்குள் வீட்டில் பூஜை அறையில் விளக்கேற்றி வழிபட்டு. வீடுகளில் தீபங்கள் ஏற்ற தயாராக இருக்க வேண்டும்.திருவண்ணாமலையில் மகா தீபம் ஏற்றப்படக்கூடிய மாலை 6 மணிக்கு நாமும் நம் வீட்டு வாசல் மற்றும் பிற இடங்களில் தீபங்களை ஏற்றி வைத்து வழிபாடு செய்ய சிறப்பு நேரமாக இருக்கும்.

அதை தொடர்ந்து 10 நாட்கள் நடைபெறும் தீபத் திருவிழாவில், தினசரி காலை மற்றும் மாலை இருமுறை சுவாமி திருவீதி உலா நடைபெறும்.
இந்த விழாவின் முக்கிய நிகழ்வாக வருகிற நவம்பர் 22-ஆம் தேதி இரவு வெள்ளி ரதத்தில் மாட வீதியில் பவனி வந்து பஞ்சமூர்த்திகள் அருள் புரிவார்கள். 
இதைத் தொடர்ந்து வருகிற நவம்பர் 23 ஆம் தேதி வியாழக்கிழமை காலையில் மகா தேரோட்டம் நடைபெறும்.

நவம்பர் 26 ஆம் தேதி நடைபெற உள்ள விழாவில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்வார்கள். நிறைவு நாளான 10வது  நாள் நவம்பர் 26- ஆம் தேதி அதிகாலை திருக்கோவில் கருவறையின் முன்பு அதிகாலை 4 மணிக்கு பரணி தீபமும், அதனைத் தொடர்ந்து அன்று மாலை 6 மணிக்கு திருக்கோவில் பின்புறம் உள்ள 2,668 அடி உயரம் கொண்ட தீப மலையின் மீது மகா தீபம் ஏற்றப்படும்.