மனையாடி சாஸ்திரம் - Manaiyadi shastram

Manaiyadi shastram reveals the vaasthu shastra compatibility between a specific geometry of a home or room and its occupants. Analysing this compatibility according to Tamil vaasthu principles of manaiyadi shastram is known as ayadi calculations, ayadi kanitham, manai porutham, ayadi porutham, ayadi compatibility and Tamil vaasthu porutham. Calculations used in this Tamil vaasthu shastra porutham is known as ayadi kanitham and ayadi calculations.

Manaiyadi shastram
மனையடி சாஸ்திரம்

மனையாடி சாஸ்திரம் ஒரு வீடு அல்லது அறையின் குறிப்பிட்ட வடிவியல் மற்றும் அதன் குடியிருப்பாளர்களுக்கிடையேயான வாஸ்து சாஸ்திர இணக்கத்தை வெளிப்படுத்துகிறது. மணையாடி சாஸ்திரத்தின் தமிழ் வாஸ்து கோட்பாடுகளின்படி இந்த பொருந்தக்கூடிய தன்மையை பகுப்பாய்வு செய்வது ஆயடி கணக்கீடுகள், ஆயாதி கனிதம், மனம் பொருத்தம், ஆயடி பொருத்தம், ஆயாதி பொருத்தம் மற்றும் தமிழ் வாஸ்து பொருத்தம் என அறியப்படுகிறது. இந்த தமிழ் வாஸ்து சாஸ்திர பொருத்தம் பயன்படுத்தப்படும் கணக்கீடுகள் அயடி கணிதம் மற்றும் ஆயடி கணக்கீடுகள் என அறியப்படுகிறது.


மனையடி சாஸ்திரம்(Manaiyadi Sastram in Tamil) மற்றும் மனையடி சாஸ்திரம் அடி கணக்கு (Vastu feet for house in Tamil) குறைந்தது 6 அடியில் இருந்து மட்டுமே கணக்கிடப்படுகிறது. 6 அடிகளுக்கு கீழ் கிடையாது. அவற்றின் நீள அகல அடிகள் எவ்வளவு இருந்தான் என்ன பயன் என்று பார்ப்போம்.

மனையடி சாஸ்திரம்(Manaiyadi Sasthiram) – இந்த பிரபஞ்சம் பஞ்ச பூதங்களை வித்தாக கொண்டது. ஒவ்வொரு உயிர் பொருள்கள், உயிரற்ற பொருள்கள் எல்லாவற்றிலும் இதன் ஆதிக்கம் உள்ளது. ஒருவருக்கு தான் வசிக்கும் வீட்டில் அமைதி நிலவி செல்வம் ஆரோக்கியம் பெற நினைப்பவர் கண்டிப்பாக மனையடி சாஸ்திரம்(Manaiyadi Sasthiram) கையாள வேண்டும்.

வீடு அமைக்க வாஸ்து சாஸ்திரம்


View English Version
அகலம், நீளம்
பலன்
6 அடி
வீட்டில் நன்மை உண்டாகும்.
7 அடி
தரித்திரம் பீடிக்கும்.
8 அடி
எண்ணியவை ஈடேறும், பகை நீங்கும், தொட்டது துலங்கும்.
9 அடி
ஆயுள் குறையும், சலிப்புகள் உண்டாகும்.
10 அடி
கால்நடை செல்வம் பெருகும். வேளாண்மை செழிக்கும்.
11 அடி
பிள்ளைப்பேறு உண்டாகும்.
12 அடி
சேர்த்த செல்வங்கள் அழியும் நிலை.
13 அடி
பகை அதிகரிக்கும், பொருள் இழப்பு ஏற்படும்.
14 அடி
நஷ்டம் ஏற்படும், சபலம் உண்டாகும்.
15 அடி
செல்வம் சேராது, பாவம் சேரும்.
16 அடி
செல்வம் சேரும். பகை நீங்கும்.
17 அடி
அரசனை போல வாழ்வு கிடைக்கும்.
18 அடி
அனைத்தும் அழியும், பெண்களுக்கு நோய் ஏற்படும்.
19 அடி
உயிர் சேதம் ஏற்படும்.
20 அடி
தொழில், வியாபாரம் சிறக்கும், இன்பம் கூடும்.
21 அடி
வளர்ச்சி ஏற்படும், பால் சம்மந்தமான அனைத்தும் சிறக்கும்.
22 அடி
பகைவர்கள் அஞ்சும் நிலை உண்டாகும்.
23 அடி
நோய் மற்றும் கலக்கம் ஏற்படும்.
24 அடி
ஆயுள் குறையும்.
25 அடி
மனைவி இறக்கும் நிலை உண்டாகும்.
26 அடி
செல்வம் சேரும் ஆனால் அமைதி இருக்காது.
27 அடி
புகழ் பெருகும், பாழான பயிர்கள் விளையும்.
28 அடி
தெய்வ பலன் பெருகும். நிறைவான வாழ்வு ஏற்படும்.
29 அடி
செல்வம் சேரும், பால் பாக்கியம் உண்டாகும்.
30 அடி
வீட்டில் இலட்சுமி கடாட்சம் வீசும்.
31 அடி
இறையருள் உண்டாகும்.
32 அடி
ஏற்றத்தாழ்வு ஏற்படும். ஆனால் கடவுள் அருள் நிச்சயம் உண்டு.
33 அடி
குடி உயரும்.
34 அடி
வீட்டை விட்டு ஓடும் நிலை உண்டாகும்.
35 அடி
லட்சுமி கடாட்சம் உண்டாகும்.
36 அடி
அதிகப்படியான புகழ், உயர்வான நிலை உண்டாகும்.
37 அடி
இன்பம், லாபம் இரண்டும் உண்டு.
38 அடி
தீய சக்திகள் குடிகொள்ளும்.
39 அடி
சுகம், இன்பம் இரண்டும் உண்டு.
40 அடி
வெறுப்பு, சோர்வு உண்டாகும்.
41 அடி
செல்வம், இன்பம் இரண்டும் உண்டு.
42 அடி
மகாலட்சுமி குடியிருப்பாள்.
43 அடி
சிறப்பற்ற நிலை உண்டாகும்.
44 அடி
கண் சம்மந்தமான பிரச்சனைகள் ஏற்படும்.
45 அடி
சகல பாக்கியம் உண்டாகும்.
46 அடி
குடி பெயரும் நிலை ஏற்படும்.
47 அடி
வறுமை பீடிக்கும்.
48 அடி
நெருப்பு சம்மந்தமான பாதிப்புகள் ஏற்படும்.
49 அடி
மூதேவி வாசம் செய்வாள்.
50 அடி
பால் பாக்கியம் உண்டாகும்.
51 அடி
வழக்கு ஏற்ப்படும்.
52 அடி
தானியம் அதிகரிக்கும்.
53 அடி
விரயம் உண்டாகும்.
54 அடி
லாபம் பெருகும்.
55 அடி
உறவினர்களிடையே மனஸ்தாபம் ஏற்படும்.
56 அடி
பிள்ளைகளால் நன்மை உண்டாகும்.
57 அடி
குழந்தை இன்மை ஏற்ப்படும்.
58 அடி
விரோதம் அதிகரிக்கும்.
59 அடி
நன்மை தீமை அதிகம் இல்லாத மத்திம நிலை.
60 அடி
பொருள் சேர்க்கை உண்டாகும்.
61 அடி
பகை அதிகரிக்கும்.
62 அடி
வறுமை பீடிக்கும்.
63 அடி
குடி பெயரும் நிலை ஏற்படும்.
64 அடி
சகல சம்பத்தும் உண்டாகும்.
65 அடி
பெண்களால் இல்லறவாழ்வில் இனிமை இருக்காது.
66 அடி
புத்திர பாக்கியம் ஏற்படும்.
67 அடி
வீட்டில் ஏதாவது ஒரு பயம் நிலைத்திருக்கும்.
68 அடி
லாபம் பெருகும்.
69 அடி
நெருப்பினால் சேதம் உண்டாகும்.
70 அடி
பிறருக்கு நன்மை செய்யும் நிலை உண்டாகும்.
71 அடி
யோகம் உண்டாகும்.
72 அடி
பாக்கியம் உண்டாகும். ஆடம்பர வாழ்வு கிடைக்கும்.
73 அடி
குதிரை கட்டி வாழ்வான்.
74 அடி
அதிகப்படியான அபிவிருத்தி ஏற்படும்.
75 அடி
வீட்டில் சுகம் உண்டாகும்.
76 அடி
உதவி கிடைக்காது, பயமே வாழ்க்கை ஆகும்.
77 அடி
தேவையான அனைத்தும் கிடைக்கும். செல்வம் பெருகும்.
78 அடி
வாரிசுகளுக்கு தீமை உண்டாகும்.
79 அடி
கால்நடைகள் பெருகும்.
80 அடி
லட்சுமி கடாச்சம் வீசும்.
81 அடி
ஆபத்து உண்டாகும்.
82 அடி
இயற்கையால் சேதம் உண்டாகும்.
83 அடி
மரண பயம் உண்டாகும்.
84 அடி
வருவாய் பெருகி செளக்கியம் உண்டாகும்.
85 அடி
சீமானாக வாழ்வர்.
86 அடி
தொல்லை, துயரங்கள் அதிகரிக்கும்.
87 அடி
பெருமை தரக்கூடிய பிரயாணம் ஏற்படும்.
88 அடி
செளக்கியம் உண்டாகும்.
89 அடி
அடுத்தடுத்து வீடு கட்டும் நிலை உண்டாகும்.
90 அடி
யோகம் ஏற்படும்.
91 அடி
விஸ்வாசமான மனிதர்களின் சேர்க்கை ஏற்படும்.
92 அடி
ஐஸ்வரியம் பெருகும்.
93 அடி
பல ஊர்களுக்கு அல்லது பல தேசங்களுக்கு செல்லும் நிலை ஏற்படும்.
94 அடி
நிம்மதி குறையும், அன்னிய தேசத்தில் வசிக்கும் நிலை இருக்கும்.
95 அடி
தனம் பெருகும்.
96 அடி
அனைத்தும் அழியும் நிலை உண்டாகும்.
97 அடி
நீர் சம்மந்தமான வியாபாரம் நிலைக்கும்.
98 அடி
வெளிநாடு செல்லும் வாய்ப்பு உண்டாகும்.
99 அடி
சிறப்பான ஒரு நிலையும், தலைமைத்துவமும் இருக்கும் .
100 அடி
எல்லா நலன்களும் கிடைக்கும்.