🔔 அமாவாசை, பௌர்ணமி, சஷ்டி, ஏகாதசி, சந்திராஷ்டமம் — FREE Alerts! Subscribe now →          🔔 Amavasai, Pournami, Sashti, Ekadashi, Chandrashtama — Get notified 1 day before!         
Home/கட்டுரைகள்/வீட்டில் லெட்சுமி கடாட்சம் வர வெள்ளிக்கிழமை வழிபாடு...!! | Friday worship to bring Lakshmi Kataksam at home...!!
Spirituality

வீட்டில் லெட்சுமி கடாட்சம் வர வெள்ளிக்கிழமை வழிபாடு...!! | Friday worship to bring Lakshmi Kataksam at home...!!

June 28, 2024uma453 views

வீட்டில் லெட்சுமி கடாட்சம் வர வெள்ளிக்கிழமை வழிபாடு...!!

 

வெள்ளிக்கிழமை மஹாலக்ஷ்மிக்கு உகந்த நாளாகவும், மங்களகரமான நாளாகவும் கருதப்படுகிறது. மற்ற நாட்களை விட இந்த நாள் மிகவும் புனிதமானது. எனவே இந்த நாளில் ஒரு செயலைத் தொடங்கினால் அது வெற்றியடையும். வெள்ளிக்கிழமை ஒரு நல்ல தொடக்கத்திற்கான நல்ல நாள். 

மகாலட்சுமியை 24 வெள்ளிக்கிழமைகள் தொடர்ந்து வழிபட்டால் வீட்டில் செல்வம் பெருகும். 

வெள்ளிக்கிழமை சிறப்பு: 

வெள்ளிக் கிழமைகளில் பெருமாள் கோவிலில் உள்ள அன்னைக்கு  அபிஷேகத்திற்கு தேவையான பால் வாங்கி கொடுத்தால் பண வரவு அதிகரிக்கும். தாயாருக்கு பச்சை வளையல் அணிவித்தால் செல்வம் அதிகரிக்கும். 

வெள்ளியன்று சுக்கிர ஓரையில் மஹாலக்ஷ்மி அஷ்டோத்திரம் செந்தாமரஇதழ் கொண்டு பூஜிப்பது உங்களுக்கு அதிர்ஷ்டத்தைத் தரும். வெள்ளிக்கிழமைகளில் மாலை வேளையில் பசுவிற்கு உணவளிக்க செல்வம் கூடும். 

 வெள்ளிக்கிழமைகளில் மாலை வேளையில் வீட்டில் உள்ள தீய சக்திகள் விலக சாம்பிராணியை வைத்து வீடு முழுவதும் புகை போடுங்கள். இது வீட்டில் நேர்மறை ஆற்றலையும் அதிகரிக்கிறது. இதனால் வீட்டில் உள்ள அனைவருக்கும் புத்துணர்ச்சி கிடைக்கும். 

வெள்ளிக்கிழமையன்று அரச மரத்தடியில் அமர்ந்திருக்கும் விநாயகப் பெருமானை 11 தீபங்கள் ஏற்றி வழிபட்டால் வருமானம் பெருகும். அதேபோல் அரச மரத்தை 11 முறை வலம் வருவதும் மிகுந்த பலன்களைத் தரும். வெள்ளிக்கிழமை தோறும் குபேர தீபத்தில் தாமரை திரி போட்டு விளக்கேற்றினால் குபேரனின் அருள் கிடைக்கும். 

வெள்ளிக்கிழமை விரதம் இருப்பது மிகவும் சிறப்பு வாய்ந்தது. வெள்ளிக் கிழமை விரதம் அனுஷ்டித்தால், லட்சுமி, முருகன், சுக்ரன் ஆகியோரின் அருளைப் பெறலாம். லட்சுமி கடாட்சம் நிறைந்த வெள்ளிக்கிழமையில் அவளது அம்சமாக விளங்கும் உப்பை வாங்கினால் இரட்டிப்பு பலன் கிடைப்பதுடன் நம் வீட்டில் எப்போதும் லட்சுமி கடாட்சம் நிறைந்திருக்கும் என்பது நம்பிக்கை.