🔔 அமாவாசை, பௌர்ணமி, சஷ்டி, ஏகாதசி, சந்திராஷ்டமம் — FREE Alerts! Subscribe now →          🔔 Amavasai, Pournami, Sashti, Ekadashi, Chandrashtama — Get notified 1 day before!         
Home/கட்டுரைகள்/மேல்நோக்கு, கீழ்நோக்கு மற்றும் சமநோக்கு நாள்...!! | Upward, Downward and Equinox day...!!
Spirituality

மேல்நோக்கு, கீழ்நோக்கு மற்றும் சமநோக்கு நாள்...!! | Upward, Downward and Equinox day...!!

June 26, 2024uma185 views

மேல்நோக்கு, கீழ்நோக்கு மற்றும் சமநோக்கு நாள்...!! 

 

மேல்நோக்கு நாள்: 

1. ரோகிணி 2. திருவாதிரை 3. பூசம் 4. உத்திரம் 5. உத்திராடம் 6. திருவோணம் 7. அவிட்டம் 8. சதயம் 9. உத்திரட்டாதி ஆகிய ஒன்பது நட்சத்திரங்கள் மேல்நோக்கு நட்சத்திரங்கள் என்று அழைக்கப்படுகிறது. 

இந்த நக்ஷத்திர நாட்களில் வரும் அனைத்து நாட்களும் மேல்நோக்கு நாட்கள் என்று குறிப்பிடப்படுகிறது. இந்த நாட்களில் நாம் மேல் நோக்கி செய்யப்படும் வேலையைத் தொடங்குவது நன்மை பயக்கும். உதாரணமாக, இந்நாட்களில் மரம் நடுதல், புதிய வேலைக்குச் செல்வது, கட்டிடங்கள் அமைத்தல், வீட்டின் மேற்கூரையை அமைத்தல், கொடி மரம் அமைத்தல், சுவர், வாசற்படி அமைத்தல், உயர் பொறுப்புகளை ஏற்றல் போன்றவற்றைச் செய்யலாம். 

கீழ்நோக்கு நாள்: 

1. பரணி 2. கிருத்திகை 3. ஆயில்யம் 4. மகம் 5. பூரம் 6. விசாகம் 7. மூலம் 8. பூராடம் 9. பூரட்டாதி ஆகிய ஒன்பதும் கீழ்நோக்கு நட்சத்திரங்கள் என்று அழைக்கப்படுகிறது. 

இந்த நக்ஷத்திர நாட்களில் வரும் அனைத்து நாட்களும் கீழ்நோக்கு நாட்கள் என்று குறிப்பிடப்படுகிறது. இந்த நாட்களில் கீழ் நோக்கி செய்யும் வேலையைத் தொடங்குவது நமக்கு நன்மை பயக்கும். உதாரணமாக, இந்த நாட்களில் மண்ணுக்கு அடியில் விளையும் பயிர்களை நடுதல், சுரங்கம் தோண்டுதல், கிணறு தோண்டுதல், அகழ்வாராய்ச்சி பணிகளைத் தொடங்குதல் மற்றும் வீட்டில் போர்வெல் நிறுவுதல் போன்றவற்றைச் செய்யலாம். 

சமநோக்கு நாள்: 

1. அஸ்வினி 2. மிருகசீரிஷம் 3. புனர்பூசம் 4. அஸ்தம் 5. சித்திரை 6. சுவாதி 7. அனுஷம் 8. கேட்டை 9. ரேவதி ஆகிய ஒன்பது நட்சத்திரங்கள் சமநோக்கு நட்சத்திரங்கள்  என்றும் அழைக்கப்படுகிறது. 

இந்த நக்ஷத்திர நாட்களில் வரும் அனைத்து நாட்களும் சம நோக்கு நாட்கள் என்று குறிப்பிடப்படுகிறது. இந்த நாட்களில் ஏற்ற தாழ்வு இல்லாமல் சமமான வேலையைச் செய்யலாம். உதாரணமாக, உழுதல், சாலைகள் அமைத்தல், வாகனங்கள் வாங்குதல், குதிரைகள், காளைகள், எருமைகள், கழுதைகள் போன்ற கால்நடைகளை வாங்குதல், மேய்ச்சல், செல்லப்பிராணிகளை வாங்குதல் மற்றும் வீட்டில் தளம் போடுதல் போன்ற வேலைகளைச் செய்யலாம்.