வணக்கம் நேயர்களே!! இன்றைய பதிவில் நாம் காணவிருப்பது திருவிளக்கு எத்தனை முகம் ஏற்றினால் என்ன பலன்கள், எந்த திசையில் விளக்கு ஏற்றுவது, எந்த தெய்வத்திற்கு எந்த எண்ணெய் பயன்படுத்துவது, எந்த திரியில் ஏற்றினால் என்ன பலன்கள் ஆகியவற்றைப் பற்றி பார்க்கலாம்.
திருவிளக்கின் அமைப்பு
திருவிளக்கு என்பது அகிலாண்ட நாயகியின் திருவடிகள். அடிப்பாகத்தில் ஸ்ரீ பிரம்மா நிலை பெற்றுள்ளார். கீழ்த்தண்டு பாகம் ஸ்ரீ மகா விஷ்ணுவின் உறைவிடம். நெய், எண்ணெய் நிறையுமிடம் சிவ பெருமானின் திருமேனி திகழும் இடம்.
விளக்கின் மேல் பாகம் விநாயகர், முருகர், ஸ்ரீ ராமர், ஸ்ரீ கிருஷ்ணர், இந்திரர் ஆகியோர் அலங்கரிக்கும் இடம். தீபத்தில் துர்கா, லெட்சுமி, சரஸ்வதி ஆகியோர் உள்ளனர்.
எந்தெந்த வகையான விளக்கில் விளக்கேற்றினால் என்ன பயன்கள்
வெண்கலம் – பாவம் போக்கும்
அகல் விளக்கு – சக்தி கொடுக்கும்
தாமிர உலோகம் – கோபம் நீக்கும்
குத்துவிளக்கு தீபம் ஏற்றுவதன் பலன்கள்
ஒரு முகம் ஏற்றினால் – மத்திம பலன் கிடைக்கும்
இரு முகம் ஏற்றினால் – குடும்ப ஒற்றுமை பெருகும்
மூன்று முகம் ஏற்றினால் – புத்தி சுகம் தரும்
நான்கு முகம் ஏற்றினால் – பசு, பூமி பாக்கியம் தரும்
ஐந்து முகம் ஏற்றினால் – செல்வம் பெருகும்
திருவிளக்கு பூஜை செய்வதன் சிறப்பு
தீப மங்கள ஜோதி நமோ நம என்றும் ஆதியும் அந்தமும் இல்லா அருட்பெருஞ் ஜோதியே என்றும் எங்கும் வியாபித்து இருக்கும் பரம்பொருளான இறைவனை ஜோதி ஸ்வரூபமாக பேரருளாளர்கள் வழிபட்டு வந்துள்ளனர். புற இருளைப் போக்குவது ஒளி, அக இருளைப் போக்குவது வழிபாடாகும். இதற்காகத் தான் நம் முன்னோர்கள் விளக்கேற்றி வழிபாடு செய்யும் ஒரு பாரம்பரியத்தை உருவாக்கியுள்ளார்கள்.
தீபத்தை எந்தெந்த திசையில் ஏற்றினால் என்னென்ன பலன் கிடைக்கும்
கிழக்கு: எல்லாவிதக் கிரக தோஷங்களும், பீடைகளும் விலகும்.
மேற்கு: கடன் பிரச்சினை, சனி தோஷம், பீடை, பங்காளிப் பகை நீங்கும்.
வடக்கு: செல்வம் சேரும், திருமணத்தடை தீரும்.
தெற்கு: அமங்கலமும், அபச குணமும் ஆகும். எனவே தெற்குத் திசையைப் பார்த்து விளக்கு ஏற்றி வைக்கக் கூடாது.
எந்தெந்த தெய்வத்திற்கு எந்தெந்த எண்ணெய்கள் ஏற்றினால் ஏற்படும் ஏற்றங்கள்
நல்லெண்ணெய் : கால கிரக தோஷம் நீங்கும். யம பயம் அகலும். (மஹா பைரவருக்கும், ஸ்ரீ நாராயணனுக்கும் சர்வ தேவதைகளுக்கும் ஏற்றது)
தேங்காய் எண்ணெய்: தேக ஆரோக்கியம். தனதான்ய விருத்தி உண்டாகும். (விநாயகருக்கு ஏற்றது).
விளக்கெண்ணெய் : மன அமைதி, அருட்கடாட்சம் தரும். மற்றும் எல்லாவித செல்வமும் பெறலாம். (ஸ்ரீ தட்சிணாமூர்த்தி ஏற்றது)
இலுப்பை எண்ணெய் : தனதானியங்களை செழிப்பாக வைக்கும். ஸ்ரீ ருத்திரருக்கும். ஸ்ரீ புவனேஸ்வரி தேவிக்கும் ஏற்றது)
நெய் : ஐஸ்வர்யங்களை அள்ளி தரும் (அஷ்ட லெட்சுமிகளுக்கும் குறிப்பாக ஸ்ரீ மகாலெட்சுமிக்கும் ஏற்றது
புங்கை எண்ணெய் : திருமண தடைகள், சர்ப தோஷங்கள் நீங்கும் (நாக தெய்வங்களுக்கு ஏற்றது)
வேப்ப எண்ணெய் : மாற்றாரின் துர்ப்பார்வைகள், எதிரிகள் தொல்லைகள் நீங்கும் (மகிஷாசுர மர்த்தினிக்கு ஏற்றது
கடுகு எண்ணெய் : கடுகு எண்ணெய்யில் தீபம் ஏற்ற சூரிய பகவானின் அருள் கிட்டும்.
நீரடி முத்து எண்ணெய் : கண் திருஷ்டி. துஷ்டங்கள் நீங்கும். (ஸ்ரீ பகவதி தேவிக்கு ஏற்றது)
சந்தனாதி எண்ணெய் : சகல சம்பத்துக்களையும் குபேர செல்வங்களையும் அள்ளித் தரும் (தேவர்களுக்கு ஏற்றது)
கடலை எண்ணெய் : இதில் தீபம் ஏற்றுவது மிகவும் தவறு. நித்திய கடன், துக்கம், பயம், சோரநாசம், பீடை இவைகள் தானே வந்து சேரும். (இதை எந்த தெய்வமும் ஏற்காது)
குலதெய்வத்திற்கு நெய், இலுப்பை எண்ணெய், வேப்பெண்ணெய் இவை மூன்றும் சேர்ந்து விளக்கேற்றலாம்.
ஸ்ரீ பராசக்திக்கு இலுப்பை எண்ணெய், தேங்காய் எண்ணெய், வேப்பெண்ணெய், விளக்கெணெய், நெய் இவை ஐந்தும் கலந்தும் விளக்கேற்றலாம்.
எந்த வகை திரியில் தீபம் ஏற்றினால் என்ன பலன் கிடைக்கும்
தாமரை நூல் திரி : இதை திரித்து தீபம் ஏற்றினால் செல்வம் நிலைக்கும். முன்வினை பாவம் நீங்கும்.
நூல் திரி : இதனால் ஏற்றப்படும் தீபம் சுபயோக பாக்கியங்களைக் கொடுக்கும்.
பஞ்சுதிரி: பஞ்சுதிரி போட்டு விளக்கேற்றினால் வீட்டில் மங்களம் நிலைக்கும்.
வாழைத்தண்டு திரி : இதன் மூலம் தீபம் ஏற்றுவதால் மக்கட்செல்வம் உண்டாகும். தெய்வக் குற்றம் நீங்கி மனசாந்தி ஏற்படும்.
வெள்ளெருக்கன் திரி : வெள்ளை எருக்கம் பட்டைத்திரி போட்டு விளக்கேற்றினால் பெரும் செல்வம் சேரும். வீட்டில் பெண்கள் சேர்த்து அதிகம் தூங்குதலும், துன்பமும் நீங்கும்.
புது மஞ்சள் கலர் சேலைத்துண்டு : புது மஞ்சள் துணி திரிபோட்டு விளக்கேற்றினால் பேய் பிடித்தவர்களுக்குத் தொல்லைகள் நீங்கும். காற்று, கருப்பு சேஷட்டைகள் விலகும். தெய்வ அருள் கிட்டும்.
சிவப்பு கலர் சேலைத்துண்டு : திரியோதசி திதியில் சிவனுக்கு விளக்கேற்றினால் சுக்ரதோஷம், செவ்வாய் தோஷம் நீங்கும்.
புதிய பருத்தி ஆடையில் அரைத்த சந்தனத்தில் பன்னீர் கலந்து அதைத் தேய்த்து காய வைத்துத் திரி தயார் செய்து திருவாதிரை நட்சத்திரத்தில் விளக்கெற்ற ஆரம்பிக்கவும். ஒரு ஆண்டு தொடர்ந்து இப்படி விளக்கேற்றினால் வெண்குஷ்டம், நரம்புத்தளர்ச்சி ஆகிய நோய்களின் வேகம் குறையும்.