ஓம் சரவணபவாய நமஹ என்றால் என்ன?
ஓம் சரவணபவாய நம என்பது சமஸ்கிருத மந்திரம், இது நல்ல அதிர்ஷ்டம், செல்வசெழிப்பைக் கொண்டுவருவதாக நம்பப்படுகிறது. இது சில நேரங்களில் கார்த்திகேய மந்திரம் அல்லது முருக மந்திரம் என்று அழைக்கப்படுகிறது.முருகனின் மூலமந்திரம் ஓம் சரவணபவாய நம என்பதாகும். சரவணபவ என்று சொன்னால் ஆறு எழுத்து மந்திரம். ஆறுமுகம் என்று சொன்னால் ஐந்து எழுத்து மந்திரம். கந்தன் என்று சொன்னால் நாலு எழுத்து மந்திரம்.முருகா என்று சொன்னால் மூன்று எழுத்து மந்திரம். வேல் என்று சொன்னால் இரேழுத்து மந்திரம். ஓம் என்று சொன்னால் ஓரேழுத்து மந்திரம்.
ஒரு மந்திரம் என்பது ஒற்றை எழுத்து, சொல் அல்லது சொற்றொடர் ஆகும், இது வார்த்தைகளில் உள்ள எந்த குறிப்பிட்ட அர்த்தத்தையும் விட அதன் ஒலி அதிர்வுகளின் சக்திக்காக அடிக்கடி உச்சரிக்கப்படுகிறது.
நீங்கள் தினமும் ஒரு மந்திரத்தைச் சொல்ல சொல்ல, அது உங்கள் மனதில் மாற்றத்தை ஏற்படுத்தும், அந்த மந்திரத்தைச் சொல்லும்போது நீங்கள் நினைப்பது நடக்கும்.உங்கள் சிந்தனை நேர்மறையாக இருக்க வேண்டும்.
உங்கள் வீட்டில் செல்வம் பெருக,வாழ்வில் வெற்றி,தைரியம் பெற 'ஓம் சரவணபவாய நம" என்னும் சக்தி வாய்ந்த
முருகப்பெருமானின் இந்த மந்திரத்தை தினம் தினம் சொல்லி முருகப் பெருமானை வழிபாடு செய்து பாருங்கள்.
உங்கள் மனதிற்குள் ஒரு தெளிவு பிறக்கும்.உங்களுக்குள் ஒரு சக்தி வரும்,அந்த சக்தியை நீங்கள் உணர்வீர்கள்.
ஓம் சரவணபவாய நமஹ என்னும் திருமந்திரம் சொல்லி முருகனின் அருளை அனைவரும் பெறுங்கள்.இந்த காணொளியை உங்கள் உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கு பகிருங்கள் அவர்களும் முருகனின் அருளை பெறுவார்கள்.
முருகனின் மூலமந்திரம் "ஓம் சரவணபவாய நம" என்பதாகும்.