மணக்குள விநாயகர் தல வரலாறு,நேரம்,பூஜை விவரங்கள் | Manakula Vinayagar Temple History,Timings, Pooja Details

sathiya 184 13/1/2024
 மணக்குள விநாயகர் தல வரலாறு,நேரம்,பூஜை விவரங்கள் | Manakula Vinayagar Temple History,Timings, Pooja Details

இக்கோயில் பிரெஞ்சுக்காரர்கள் புதுச்சேரிக்கு வருவதற்கு,அதாவது 1666 ஆம் ஆண்டுக்கும் முன்பே இருந்த  ஒரு கோவில் ஆகும். மணல் குளத்து விநாயகர் என்ற பெயர் மருவி மணக்குள விநாயகர் ஆனது என்றறியப்படுகிறது. புதுச்சேரியின் சுற்றுலாத் தலங்களில் இதுவும் ஒன்று.புகழ் பெற்ற விநாயகர் கோயில்களில் குறிப்பிடத்தக்கதும் ஆகும்.

புதுச்சேரி அந்த காலத்தில் மிகப்பெரிய நகரமாக திகழவில்லை.ஆனால் நாகரிகம் செழித்த,செல்வந்தர்கள் கொழித்த அழகான பேரூராக விளங்கியது.இன்று மணற்குள விநாயகர் 
கோவில் தெரு என்று அழைக்கப்படும் தெருவானது அன்று நெசவாளர் தெரு என்று அழைக்கப்பட்டது. 

தொள்ளைக்காது சித்தர்:

தொள்ளைக்காது சுவாமிகளின் –இயற் பெயர் என்ன -தாய் தந்தையர் யார் எப்பொழுது பிறந்தார்-எங்கிருந்து வந்தார் என்பது யாருக்கும் தெரியாது. புதுவை, கோரிமேடு அடுத்துள்ள முரட்டாண்டி என்னும் ஊரிலுள்ள அம்மன் கோவிலில் தான் ஊர் மக்கள் பார்த்தார்களாம்.

இள வயதிலேயே தந்தையை இழந்த சுவாமிகள், தாயார் தனக்கு திருமண ஏற்பாடு செய்வதைக் கண்டு மிரண்டு போய் தன் குலதெய்வமான அம்மனிடம் முறையிட்டார். அப்பொழுது அம்மன் தன்னை அழைப்பது போன்று ஒர் ஒலி கேட்க, அந்த ஒலியை கேட்டுக் கொண்டே நடக்கத் தொடங்கியவர் ”முரட்டாண்டி” என்ற ஊரை அடைந்தவுடன் தான் தன் நிலை அடைந்தார். அங்கிருந்த முத்து மாரியம்மன் கோவிலை அடைந்து அம்மனை வேண்டினார்.இடைவிடாது அம்மனை வணங்கிக் கொண்டேயிருந்தார். அதி அற்புத அழகு வாய்ந்த அன்னையின் தரிசனக் காட்சியை- அன்றிரவு கண்ணாரக்கண்டார். 

ஞான நிலைக்குள் தன்னை நிறுத்திக் கொண்டு –யாவற்றையும் உணர்ந்தார். அங்கு சுவாமிகளுக்கு ஞானம் கிடைத்தது. அத்துடன் அங்கிருந்து ஐந்து மைல் தொலைவில் உள்ள புதுவைக்குச் சென்று-கடற்கரை அருகில் இருந்த மணற் குளத்தங்கரையில் ஒரு விநாயகர் சிலையை பிரதிஷ்டை செய்து அவ்விநாயகரையும் வழிபட்டு வந்தார். தினமும் காலையில் ஐந்து மைல்கல் நடந்து புதுவையை அடைந்து, அங்கு விநாயகருக்கு மலர் அலங்காரம் செய்து- பூஜை செய்து வழிபட்டுவிட்டு –பின் அங்கிருந்து திரும்பவும் நடந்து முரட்டாண்டிக்கு வந்து அம்மனை வழிபட்டு வந்துள்ளார். இது அவரின் தினசரி வாடிக்கையானது.

பிரெஞ்சு ஆதிக்கத்தினரின் கட்டுப்பாட்டில் இருந்தபோது இத்தலத்து விநாயகரை பல முறை பிரெஞ்சு ஆட்சியாளர்கள் அகற்ற முற்பட்டனர். ஆனால், மீண்டும் மீண்டும் அங்கேயே தோன்றிய விநாயகரால் பலர் அதிர்ச்சிக்குள்ளாகி சிலையை அகற்றும் பணியை கைவிட்டனர். தொடர்ந்து இத்தல விநாயகருக்கு திருவிழா நடத்த பிரெஞ்சு அரசு மறுத்து வந்த நிலையில் பிரெஞ்சுத் துரை டூப்லே விநாயக பக்தராக மாறி விழாவை தொடக்கி வைத்தார்.

நாட்டிலேயே இங்கு மட்டும்தான்:

நம் இந்திய நாட்டிலேயே விநாயகருக்கு தங்கத்தால் ஆன கோபுரம் உள்ளது என்றால் அது இத்தலத்தில் மட்டும் தான். மேலும், விநாயகருக்கு இத்தலத்தில் மட்டும் தான் திருக்கல்யாணம் நடக்கிறது. பெரும்பாலும் பிரம்மச்சாரியாக பாவிக்கப்படும் விநாயகர், இத்தலத்தில் சித்தி,புத்தி என்னும் மனைவிகளும் காட்சியளிக்கிறார்.

விநாயகர் தலங்களில் வேறு எங்குமே இல்லாத சிறப்பாக பள்ளியறை இங்கு உள்ளது. இங்கு பள்ளியறையில் விநாயகரோடு உடன் இருப்பது அவரது தாயார் சக்தி தேவியார் ஆவார். தினமும் நைவேத்தியம் முடிந்தவுடன் விநாயகர் பள்ளியறைக்கு செல்வார். இதன் அடையாளமாக பாதம் மட்டுமே இருக்கும் உற்சவ விக்ரகம் கொண்டு செல்லப்படுகிறது.

சிவதலங்களில் இருக்கும் நடராஜரைப் போல் நர்த்தன விநாயகர் இங்கு இருக்கிறார்.

கிணற்றின் மீது விநாயகர் :

மணக்குளத்து விநாயகர் தலத்தின் மூலவர் இருக்கும் இடம் நீர்நிலைகள் அமைந்துள்ள ஒரு கிணறு ஆகும். பீடத்தின் ,இடப்பக்கம் மூலவருக்கு அருகிலேயே ஓர்  குழி ஒன்று உள்ளது. இது மிகவும் ஆழமான குழியாகும். இதன் ஆழத்தை தற்போது வரை யாராலும் கண்டறிய முடியவில்லை. மேலும், இதில் வற்றாத நீர் எப்போதுமே இருக்கும்.

கோவில் யானை லட்சுமி:


புதுச்சேரி மணக்குள விநாயகர் கோவிலுக்கு கடந்த 1996ம் ஆண்டு ஐந்து வயதில் லட்சுமி யானை வந்தது. புதுச்சேரியில் உள்ள பக்தர்களுக்கு மிகவும் நெருக்கமான யானையாக லட்சுமி திகழ்ந்தது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை மணக்குள விநாயகர் கோவிலுக்கு வரும் பக்தர்களும், சுற்றுலா பயணிகளும் யானை லட்சுமியை தரிசிக்காமல் சென்றதில்லை.கடந்த நவம்பர் 30,2022ஆண்டு உயிரிழந்தது.

வழிபாடுகள்:
கோவில் வளாகத்திற்குள், ஐந்து முகங்களைக் கொண்ட விநாயகரின் வடிவமான பஞ்சமுக விநாயகருக்கு தனி சன்னதி உள்ளது. ஒவ்வொரு முகமும் தெய்வத்தின் தெய்வீக குணங்களின் வெவ்வேறு அம்சங்களைக் குறிக்கிறது. ஞானம், அறிவு மற்றும் ஆன்மிக வளர்ச்சிக்காக பஞ்சமுக விநாயகரின் ஆசீர்வாதத்தை கோரி பக்தர்கள் இந்த சன்னதியில் பிரார்த்தனை செய்கிறார்கள்.
 
திருமண வரம், குழந்தை வரம் உள்ளிட்ட அனைத்துவிதமான வழிபாடுகளும் இங்கே நடத்தப்படுகிறது. புதிதாக தொழில் தொடங்குவோர், வாகன வழிபாடு என இத்தலத்திற்கு பக்தர்கள் அதிகளவில் பயணிக்கின்றனர். குறிப்பாக, விநாயகர் இந்து மதக் கடவுளாக இருந்தாலும், சுற்றுவட்டார, வெளிநாட்டு கிருத்துவ, முஸ்லிம் பயணிகள் கூட அதிகளவில் இங்கே வருவது வழக்கம்.

Manakula Vinayagar Temple Pooja Details:

Pooja Name

Timings

Nadai Thirapu 5:45 am
Kaalasanthi(Morning) Abishegam 6:30 am
Theeparathanai 7:30 am
Uchikaalam 11 am
Nadai Sathal 12:30 pm
Nadai Thirapu 4 pm
Saiyangalam(Evening) Abishegam 4:30 pm
Theeparathanai 5:30 pm
Arthajama Pooja 9 pm
Nadai sathal 9:30 pm
Spadigalingam Pooja Daily 11 am

Note: Friday, Saturday,  &  Sunday Uchikaala Poojai Will Start From 12 noon to 1 pm

with Mahatheeparathani

 

MANAKULA VINAYAGAR  DHARSHANAM TIMINGS

Morining - 6.30 am & 11.00 am

Evening - 4.30 pm & 9.00 pm

(Timings are subject to change during Festivals & Holidays)

MANAKULA VINAYAGAR ABISHEGAM TIMINGS

6.30 am Everyday for Devotees

11.00 am Monday to Thursday for Devotees

(Except Festival Days Evening Abhishegam for Night Dharshanam)

SANKATAHARA CHATTURTTI ABHISHEGAM (4 Times)

Morining - 6.30 am & 11.00 am

Evening - 4.30 pm & 9.00 pm

Timings are subject to change during Festival days and Holidays*
 

திருவிழா:
விநாயகர் சதுர்த்தி – இத்தலத்தில் மிகவும் விமரிசையாக கொண்டாடப்படும்.

பிரம்மோற்ஸவம்:
ஆண்டுதோறும்(தமிழ் மாதம் ஆவணி)  ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் மாதங்களில் 24 நாட்கள் கொண்டாடப்படுகிறது.

ஆண்டு முழுவதும் நடக்கும் திருவிழாக்களின் பட்டியல் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

January                 New Year
January                 Thai Ammavasai Thinam ( Kadal Theerthavaari)
January                 Rathasabthami Vethapureswarar Thirukoil Thepakulam Theerthavaari
January                 Kumbabishega Thinam Aanduvizha 1008 Sangaabishegam (Ashwini)
February                Maha Sivarathri Vizha
                                  Vinayagar Sapadigalingam Naangu Kaala Poojai
March                    Maasimaham Kadal Theerthavaari
April                      Tamil New Year Celebration
May                       Vaigasi Visaga Thiruvizha
June                     Aani Thirumajanam ?Narthana Ganapathy
July                       Thatchanaayana Puniyakaalam Vizha
August                  Bramachavam ?24 Days
                                 (Vigeshwara Poojai muthal 108 Sangaabishegam varai)
September            Sri Vinayagar Sadhurthi
October                Pavithra Urchavam 7 days
October                Vijayathasami Thangathair veethiulla
October                Annabishegam
November             Kandasasti vizha
November             Karthigai Theeba Thiruvizha
November             Karthigai Thiruvathirai ? Marathangathair veethiulla
December             Somavara Poojaigal
December             Aaruthra Tharisana Poojaigal