தைப்பூசம் என்பது உலகம் முழுவதிலும் உள்ள முருக பக்தர்களால், முருகப் பெருமானுக்கு கொண்டாடப்படும் ஒரு விழா ஆகும்.
ஆண்டுதோறும் தை மாதத்தில் பூச நட்சத்திரமும், பவுர்ணமி திதியும் ஒன்று கூடி வரும் திருநாளில் தைப்பூசம் கொண்டாடப்படுகிறது.இந்த
ஆண்டு தைப்பூசம்,ஜனவரி இருபத்து ஐந்து, வியாழக்கிழமை வருகிறது.
பூசம் நட்சத்திரம் தொடங்கும் நேரம் = 08:16 25-ஜனவரி-2024
26-ஜனவரி-2024 அன்று பூசம் நட்சத்திரம் முடிவடைகிறது = 10:28
பூசம் நட்சத்திரம், ஜனவரி இருபத்தைந்தாம் தேதி காலை எட்டு மணி பதினாறு நிமிடம் முதல் ஜனவரி இருபத்தி ஆறாம் தேதி பத்து மணி இருபத்தி எட்டு நிமிடம் வரை இருக்கிறது.
பழனி முருகன் கோயிலில் தைப்பூச திருவிழா, பத்தொன்பதாம் தேதி,கொடி ஏற்றத்துடன் துவங்கி, பத்து நாட்கள் நடைபெற விருகிறது. விழாவில் தினமும் புதுச்சேரி சப்பரம்,தந்த பல்லக்கு, வெள்ளி ஆட்டுக்கடா, வெள்ளி காமதேனு, வெள்ளி யானை, தங்க குதிரை, தங்கமயில் வாகனங்களில் வள்ளி, தெய்வானை முத்துக்குமாரசுவாமி, புறப்பாடு நடைபெற உள்ளது.
பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயிலில் இரண்டாயிரத்து இருபத்தி நான்காம் ஆண்டு தைப்பூசத் திருவிழா பத்தொன்பதாம் தேதி துவங்கி இருபத்தெட்டாம் தேதியுடன் நிறைவுபெறுகிறது.
தைப்பூச திருவிழாவை முன்னிட்டு பல்வேறு மாவட்டங்களில் இருந்து பக்தர்கள் மாலை அணிந்து விரதம் இருந்து பாதயாத்திரையாக பழனிக்கு வருகை தந்து சாமி தரிசனம் செய்வார்கள்.
நீங்களும் பழனிமலை அல்லது உங்கள் அருகில் உள்ள முருகன் கோவிலுக்கு சென்று பிரார்த்தனை செய்து முருகன் அருள் பெறுங்கள்.