சர்வ சக்தி வாய்ந்த அகத்தியரின் ஷண்முக சடாட்சர மந்திரத்தின் சிறப்புகளும் அதன் வழிபாட்டு முறையும் - Worship of Shanmukha Satatsara Mantra

uma 28 30/8/2024
 சர்வ சக்தி வாய்ந்த அகத்தியரின் ஷண்முக சடாட்சர மந்திரத்தின் சிறப்புகளும் அதன் வழிபாட்டு முறையும் - Worship of Shanmukha Satatsara Mantra

 

 
அகத்திய மாமுனிவர் அருளிய ஷண்முக சடாட்சரம் என்பது முருகப்பெருமானின் " சரஹணபவ" எனும் ஆறெழுத்து மந்திரத்தைக் குறிக்கிறது. ஷட் என்றால் ஆறு, அட்சரம் என்றால் அடுத்தடுத்து வரிசையாக வைக்கப்படுபவை என்றும் பொருள்படும். ஆகவே தான் சரஹணபவ எனும் ஆறெழுத்துளும் வரிசையாக அடுத்தடுத்து வைக்கப்பட்டு சடாட்சரமாக உருவாக்கப்பட்டது.

அகத்தியர் அருளிய மந்திரம் :

சகல ஜன வசீகரமாம் சஹாரத்தாலே
தனமுதல் அழைத்து வரும் ரஹாரத்தாலே
பகைபிணி நோய் தீர்த்து வைக்கும் ஹகாரத்தாலே
பகைத்தவரைக் கொல்ல வைக்கும் ணகாரத்தாலே
சகலமுமே மோஹிக்கும் பகாரத்தாலே
சகலரையும் ஸ்தம்பிக்கும் வகாரத்தாலே
அகங்குளிர ஓதிய ஆறெழுத்தின் பெருமை
ஆரறிவார் மகிதலத்தில் சொன்னேன் கேளே….
எந்த காரியத்திற்காகவும் வெளியே செல்லும் போது திருநீறு அணிந்து இந்த மந்திரத்தை மனதார கூறினால் காரிய வெற்றி கிட்டும்.

மந்திரத்தின் பயன்பாடு:

1. சரஹணபவ – என்று தொடர்ந்து வேண்டி வர வசீகரம் உண்டாகும்.
2. ரஹணபவச – என்று தொடர்ந்து வேண்டி வர செல்வச் செழிப்புடன் வளமான வாழ்வு உண்டாகும்.
3. ஹணபவசர – என்று தொடர்ந்து வேண்டி வர பகை, நோய்கள் நீங்கும்.
4. ணபவசரஹ – என்று தொடர்ந்து வேண்டி வர, எதிரிகளால் வரும் துன்பங்கள் நீங்கும்.
5. பவசரஹண – என்று தொடர்ந்து வேண்டி வர அனைத்து உயிர்களின் அன்பைப் பெறலாம்.
6. வசரஹணப – என்று தொடர்ந்து வேண்டி வர எதிரிகளின் சதிச்செயல் பயனற்று போகும்.
 
 நமது பிரச்சினைக்குரிய மந்திரத்தை வேண்டிக் கொள்ளலாம்.
 

ஷண்முக சடாட்சர மந்திரம் துதிக்கும் முறை:

ஓம் றீங் சரஹணபவ
ஓம் றீங் ரஹணபவச
ஓம் றீங் ஹணபவசர
ஓம் றீங் ணபவசரஹ
ஓம் றீங் பவசரஹண
ஓம் றீங் வசரஹணப
 
வளர்பிறை விசாகம் அல்லது கார்த்திகை நட்சத்திர நாளில் அல்லது செவ்வாய் கிழமை அன்று இந்த பிரார்த்தனனயைத் தொடங்கினால் சிறப்பு.
 
செம்புத் தாம்பாளத்தில் விபூதி பரப்பி அதில் முருகப்பெருமானுக்குரிய அறுங்கோணச் சக்கரம் வரைந்து நாம் துதிக்கும் மந்திரத்தை முதல் கோணம் தொடங்கி வரிசையாக எழுதி சக்கரத்தின் நடுவில் றீங் என எழுதி வழிபட்டு அந்த விபூதியை அணிந்து வர எம்பெருமானின் அருளைப் பெறலாம். நம்மால் முடிந்த நைவேத்தியம் செய்து 108 நாட்கள் தொடர்ந்து ஜெபித்து வந்தால் வாழ்வில் நிச்சயமாக மாற்றம் நிகழும்.