சுபமுஹூர்த்தம் என்றால் என்ன ? | What is subha muhurtham Day?

Uma 232 26/10/2023
 சுபமுஹூர்த்தம்  என்றால் என்ன ? | What is subha muhurtham Day?

சுபமுஹூர்த்தம் என்றால் என்ன ?

 "சுபா" என்றால் மங்களகரமானது, மேலும் "முஹூர்த்தம்" என்பது ஒரு குறிப்பிட்ட நிகழ்வுக்கு, குறிப்பாக திருமணங்களுக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட 
  ஒரு நல்ல நேரம் அல்லது தருணத்தைக் குறிக்கிறது.

 'சுப முகூர்த்தம்' என்பது 'நல்ல நேரம்' என்றும் அழைக்கப்படுகிறது.

  சுப முஹூர்தம் என்பது இந்திய திருமணங்களின் சூழலில் அடிக்கடி பயன்படுத்தப்படும் ஒரு சொல்.

 

முகூர்த்தம் என்றால் என்ன?

   ஒரு சுபச் செயலுக்கு, முதன்மை கவனம் செலுத்தும் நேரம் 'முஹூர்த்தம்' என்று சுருக்கப்பட்டுள்ளது.ஒரு நல்ல காரியத்தைத் தொடங்க ஜோதிட 
ரீதியாக நிர்ணயிக்கப்பட்ட நல்ல நேரம்.

  முகூர்த்தம் என்பது மூனே முக்கால் (3 3/4) நாளிகை, ஒன்னரை (1 1/2) மணி நேரம்.

  திருமணம் என்றதும் அதை நடத்துவதற்கான சிறந்த நாள் எது என தேடப்படுவது திருமண சுபமுகூர்த்த தினத்தில் தான்.இந்திய கலாச்சாரத்தில், 
திருமணங்கள் போன்ற முக்கியமான நிகழ்வுகளை நல்ல நேரத்தில் தொடங்குவது தம்பதிகளுக்கு நல்ல அதிர்ஷ்டத்தையும் ஆசீர்வாதத்தையும் தரும் என்று நம்பப்படுகிறது

 

சுப முஹூர்த்தம் குறிப்பது :

   சுப முகூர்த்த நேரம் குறிக்க மணமக்களின் ஜாதகம் தேவை,குறிப்பாக பெண்ணின் ஜாதகம் அவசியம் தேவை.சுப முகூர்த்தம் என்பது ஒரு ஜோதிடர் ஒரு நாளினை ஆராய்ந்து சாதக , 
பாதகங்களை எல்லாம் அலசிய பின்னர்  நல்ல நேரத்தை தேர்ந்தெடுக்கிறார்.

  சுபமுகூர்த்த நேரம் என்ற நல்ல நேரத்தை குறிக்க, அந்த நாள் நல்ல நாளா, நல்ல கிழமையா, நல்ல திதியா, நல்ல யோகம், தசா புத்திகள் மற்றும் 
அன்றைய கோச்சார நிலவரம் ஏற்ற வகையில் உள்ளதா, சுப கிரகங்களின் அனுகூலம் உள்ளதா அதாவது குரு பலம், சந்திர பலம் எப்படி இருக்கிறது என்று 
மணமக்களின் ஜாதகத்தைக் கொண்டு ஆராய்ந்து பார்த்து நாள் குறிப்பார்கள்.

 நீங்கள் குறிப்பிட்ட தேதி அல்லது நிகழ்வை மனதில் வைத்திருந்தால் அன்றைய சுப வேளையில் சுப முஹூர்த்தத்தில் நடத்தினால், அந்த நிகழ்வில் வெற்றி பெறுவதற்கான வாய்ப்புகள் அதிகம்.