தீபாவளி பண்டிகையான வரும் நவம்பர் 12ஆம் தேதி,அன்றைய தினம் தமிழ்நாடு உட்பட பல்வேறு மாநிலங்களில் இருந்து பொதுமக்களும் பக்தர்களும் அருள்மிகு திருமலை – திருப்பதி ஏழுமலையான் திருக்கோவிலுக்குச் சென்று சுவாமி தரிசனம் செய்வது வழக்கம்.
திருப்பதி சென்று வந்தால் திருப்பம் ஏற்படும் என்ற நம்பிக்கையில் நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர் திருப்பதி மலைக்கு வாகனங்கள் மற்றும் மலைப்பாதையில் பாத யாத்திரையாகவும் சென்று பக்தர்கள் வழிபாடு செய்து வருகின்றனர். மேலும், இலவச தரிசனம், ரூ.300 கட்டணம், விஐபி என பல்வேறு முறைகளில் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.
இந்த நிலையில், திருப்பதி ஏழுமலையான் தேவஸ்தானம் ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதில், திருப்பதி ஏழுமலையான் திருக்கோவிலில் வரும் 12 -ஆம் தேதி தீபாவளி அன்று ஆஸ்தானம் என்று அழைக்கப்படும் தர்பார் நடைபெற உள்ளது.
ஐப்பசி மாதம் தொடங்கியதில் இருந்தே திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதி வருகிறது. அதாவது, நவம்பர் 1ஆம் தேதி 63,719 பேரும், நவம்பவர் 2ஆம் தேதி 59, 335 பேரும், நவம்பர் 3ஆம் தேதி 66,048 பேரும், நவம்பர் 4ஆம் தேதி 70,250 பேரும் சுவாமி தரிசனம் செய்திருக்கின்றனர். மேலும், நவம்பர் மாதத்தில் விடுமுறை நாட்களும் அதிகம் வரும் என்பதால் இனி வரும் நாட்களிலும் திருப்பதியில் பக்தர்கள் கூட்டம் அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது. அதிலும் குறிப்பாக தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பக்தர்கள் சாமி தரிசனம் செய்வார்கள். அதாவது, நவம்பர் 12ஆம் தேதி திருப்பதி ஏழுமலையான் கோயிலில் தீபாவளி ஆஸ்தானம் நடைபெற உள்ளது.
தீபாவளி ஆஸ்தானம்:
தீபாவளி பண்டிகையான வரும் நவம்பர் 12ஆம் தேதி காலை 7 மணிக்கு ஏழுமலையான் கோயிவில உள்ள தங்கவாசல் அருகே ஏழுமலையானின் தீபாவளி ஆஸ்தானம் நடைபெறும். ஆஸ்தானத்தை முன்னிட்டு அந்த நாள் உற்சவர் மலையப்ப சாமி ஸ்ரீதேவி பூதேவி சகோதரராக கோயிலில் இருக்கும் தங்கவாசல் எதிரே உள்ள கருடாழ்வார் மண்டபத்தில் எழுந்தருள்வார். அப்போது ஏழுமலையானின் சேனாதிபதியும் அங்கு எழுந்தருள்வார். தொடர்ந்து சிறப்பு பூஜைகளுடன் ஆஸ்தானம் நடைபெறும். ஆஸ்தானத்தை முன்னிட்டு அன்றைய தினம் மாலை திருப்பதி மலையில் சகஸ்ர தீப அலங்கார சேவை தவிர மற்ற அனைத்து கட்டண சேவைகளும் ரத்து செய்யப்பட்டுள்ளது.
அதே நேரத்தில் சகஸ்ரநாம தீப அலங்கார உற்சவ சேவை மாலை 5 மணிக்கு வழக்கம்போல் நடைபெறும் என திருக்கோவில் தேவஸ்தானம் அறிவித்துள்ளது. தீபாவளி சிறப்பு உற்சவத்தை முன்னிட்டு அதிக பக்தர்கள் திருமலைக்கு வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் பக்தர்கள் விரைவாக தரிசனம் செய்வதற்கும், பக்தர்களுக்கு தேவையான அனைத்து ஏற்பாடுகளையும் தேவஸ்தானம் செய்து வருகிறது.