"நீங்கள் ஆணோ பெண்ணோ விலங்கோ எறும்போ - என்னவாக இருந்தாலும் உயிரின் மூலம் என்பது உங்களுக்குள் உள்ளது."

— சத்குரு ஜகி வாசுதேவ்(Sadhguru Jaggi Vasudev)

"உங்களால் இயன்ற அளவு சிறப்பாக செயலாற்றவேண்டும் என்றால், நீங்கள் சிறந்த நிலையில் இருக்கவேண்டும்."

— சத்குரு ஜகி வாசுதேவ்(Sadhguru Jaggi Vasudev)

"எந்தவொரு மனிதருக்கும் அடிப்படையான நற்பண்பு, உங்களுக்கு நீங்களே உண்மையாக இருப்பதுதான் - சிந்தையிலும் உணர்விலும் செயலிலும் இசைந்திருக்கும் நேர்மை வேண்டும்."

— சத்குரு ஜகி வாசுதேவ்(Sadhguru Jaggi Vasudev)

"நேற்று என்ன நிகழ்ந்ததோ, அதை உங்களால் மாற்ற முடியாது. இன்று என்ன நிகழ்கிறதோ, அதை அனுபவித்துணர மட்டுமே முடியும். நாளைக்கு என்ன என்பதை நீங்கள் உருவாக்க வேண்டும்."

— சத்குரு ஜகி வாசுதேவ்(Sadhguru Jaggi Vasudev)

"மனிதராய் இருப்பதன் சாத்தியம் உண்மையாகவே மலர்வதற்கு, வெளிசூழ்நிலைகள் உங்களுக்குள் நிகழ்வதை நிர்ணயிக்காதவாறு உங்களை நீங்களே நிலைநிறுத்திக்கொள்ள வேண்டும்."

— சத்குரு ஜகி வாசுதேவ்(Sadhguru Jaggi Vasudev)

"ஒரு மனிதர் தனது தனிப்பட்ட நல்வாழ்வுக்கு அப்பாற்பட்ட ஏதோவொன்றுக்கு தன்னை அர்ப்பணிக்கும்போது, அங்கு மிக சக்திவாய்ந்த சூழ்நிலை நிலவும்."

— சத்குரு ஜகி வாசுதேவ்(Sadhguru Jaggi Vasudev)

"நீங்கள் செயல் செய்யும்போது, தயக்கம்தான் மிகக்கொடிய குற்றம்."

— சத்குரு ஜகி வாசுதேவ்(Sadhguru Jaggi Vasudev)

"மனித பாதிப்பு என்பது மனித மனதில் உருவாக்கப்படுகிறது, மனித எல்லைகளும் அப்படித்தான்."

— சத்குரு ஜகி வாசுதேவ்(Sadhguru Jaggi Vasudev)

"எப்போது விசேஷமானவராய் இருப்பதற்கான தேவை இல்லாமல் போகிறதோ, அப்போது நீங்கள் தனித்துவமானவராய் இருப்பீர்கள். வாழ்க்கையின் மகத்துவமே அதன் தனித்துவத்தில்தான் உள்ளது."

— சத்குரு ஜகி வாசுதேவ்(Sadhguru Jaggi Vasudev)

"உங்கள் நேரத்தை நிர்வகிப்பதற்கு பதிலாக, உங்களுக்கு எது முக்கியம் என்பதை தெளிவாக நிலைநிறுத்தினால், நேரம் என்பது அதற்குத் தகுந்தாற்போல அமைந்துவிடும்."

— சத்குரு ஜகி வாசுதேவ்(Sadhguru Jaggi Vasudev)

"வேதனை சூழுமோ என்ற பயம் உங்களுக்குள் இல்லாதபோது, வாழ்க்கையை எப்படி முழுமையாய் வாழ முடியுமோ அப்படி வாழ்வீர்கள்."

— சத்குரு ஜகி வாசுதேவ்(Sadhguru Jaggi Vasudev)

"உங்கள் இதயத்தில் அன்பிருந்தால், அது உங்கள் வாழ்க்கை முழுவதும் வழிநடத்தும். அன்பிற்கு அந்த மதிநுட்பம் உண்டு."

— சத்குரு ஜகி வாசுதேவ்(Sadhguru Jaggi Vasudev)

"வாழ்க்கையின் நோக்கத்தை அறிய விரும்பினால், உங்கள் உடல், மன எல்லைகளைக் கடந்து பார்க்க வேண்டும்."

— சத்குரு ஜகி வாசுதேவ்(Sadhguru Jaggi Vasudev)

"இதை அடைந்தால் போதும் என்று எதுவும் இல்லை. வாழ்க்கை எல்லையில்லா சாத்தியங்கள் நிறைந்தது."

— சத்குரு ஜகி வாசுதேவ்(Sadhguru Jaggi Vasudev)

"வாழ்க்கையைப் பற்றிய உயிர்போகும் கவலை தேவையில்லாதது. அது வெறும் நாடகம்தான்."

— சத்குரு ஜகி வாசுதேவ்(Sadhguru Jaggi Vasudev)

"இந்த உயிரின் ஆனந்தப் பரவசத்தை நீங்கள் உணரும் வரை வாழ்க்கை நிறைவு பெறாது."

— சத்குரு ஜகி வாசுதேவ்(Sadhguru Jaggi Vasudev)

"அன்பு என்பது இனிக்கப் பேசுவதல்ல, அது ஆழ்ந்த நேர்மை மற்றும் செயலுறுதி."

— சத்குரு ஜகி வாசுதேவ்(Sadhguru Jaggi Vasudev)

"வாழ்வதைவிட இங்கு செய்வதற்கு ஒன்றுமில்லை. வாழ்க்கையை மேலோட்டமாய் வாழ்வதும், ஆழமாய் வாழ்வதும் உங்கள் கைகளில்."

— சத்குரு ஜகி வாசுதேவ்(Sadhguru Jaggi Vasudev)

"ஒரே மாதிரி வாழ்க்கை சூழ்நிலையில் மீண்டும் மீண்டும் இருப்பதில் பாதுகாப்பு இருக்கிறது, ஆனால் அதில் புது சாத்தியங்கள் இல்லை, வளர்ச்சி இல்லை."

— சத்குரு ஜகி வாசுதேவ்(Sadhguru Jaggi Vasudev)

"எல்லோருக்கும் இணையம் மூலமாக உலகைப் பற்றி எல்லாமும் தெரிகிறது, ஆனால் யாருக்கும் வாழ்க்கையைப் பற்றி எதுவும் தெரிவதில்லை."

— சத்குரு ஜகி வாசுதேவ்(Sadhguru Jaggi Vasudev)