பிரம்ம தேவர் இந்த உலகில் அழகு மிக்க பெண் ஒருத்தியை படைத்தார். அவளது பெயர் அகல்யா. இந்திரன் அவள் மீது ஆசை கொண்டார். ஆனால் பிரம்மன் அவளை கௌதம ரிஷியின் பாதுகாப்பில் வைத்து அவருக்கே அகலிகையை மணமும் செய்து வைத்தார். இந்திரன் இன்னும் ஆசை அடங்காமல் அகலியா இருந்த ஆசிரமத்தை நோட்டமிட்டு வந்தார். சூழ்ச்சியால் கௌதம ரிஷியை வீட்டில் இருந்து அனுப்பி வைத்தார். அவரது மனைவி அகல்யாவை ரிஷியின் மாறுவேடத்தில் கவர்ந்தார். அதை கண்டுபிடித்த ரிஷி இந்திரன் உடலில் ஆயிரம் பெண் உறுப்பு உருவாக சாபமிட்டார். பிரம்ம தேவர் வேண்டிக் கேட்டுக் கொண்டதால் அந்த சாபத்தை மாற்றி 1000 கண்கள் இந்திரன் உடலில் உருவாக சாபமிட்டார்.