🙏 மதுரை மீனாட்சி அம்மன் திருக்கல்யாணம் 2021🙏 சித்திரை மாதம், மீனாட்சியின் திருக்கல்யாணம் மதுரையில் கோலாகலமாக நடைபெறும் ஒரு திருவிழா. இந்த வருடம் சூழ்நிலை காரணமாக அந்த திருவிழா விமர்சியாக நடைபெறாமல், சுலபமான முறையில் நடைபெற உள்ளது. பக்தர்கள் அனைவரும் நேரில் சென்று மீனாட்சி அம்மனை தரிசனம் செய்ய முடியாத சூழ்நிலை. இருப்பினும் இந்த திருநாளை வீட்டிலிருந்தே எப்படி சுலபமான முறையில் கொண்டாடலாம் என்பதைப் பற்றியும், மீனாட்சி திருக்கல்யாண வரலாற்றை பற்றிய சிறு குறிப்பையும் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம். மதுரையை ஆண்டு கொண்டிருந்த மலையத்துவச பாண்டிய மன்னருக்கும், அவருடைய மனைவி காஞ்சனாமாலைக்கும் நீண்ட நாட்களாக குழந்தை பாக்கியம் இல்லாமல் இருந்தது. குழந்தை வரம் வேண்டி இவர்கள் நடத்திய புத்திர காமேஷ்டி யாகத்தின் மூலம் மூன்று வயது பெண்ணாக, இந்த பூமியில் அவதரித்தவள் மீனாட்சி அம்மன். மீனாட்சி அம்மனுக்கு பச்சை தேவி, கற்பகவள்ளி, தடாதகை என்று பல பெயர்கள் இருந்தாலும், இந்த தேவியின் கண்கள் மீனைப் போன்று அழகான வடிவம் கொண்டதால் மீனாட்சி என்ற பெயர் வந்தது என்பது குறிப்பிடத்தக்கது. மீனாட்சி சகல வித்தைகளையும் கற்றுத் தேர்ந்தவர். சகலகலா வல்லமை பொருந்திய மீனாட்சிக்கு, தன் தந்தையான மலையப்ப பாண்டிய மன்னர் தன்னுடைய ஆட்சியை தன் மகளிடம் ஒப்படைத்து விட்டார். சிறப்பாக ஆட்சி நடத்திய மீனாட்சி பல நாடுகளுக்கு சென்று, போர் செய்து, வெற்றி வாகை சூடி தன்னுடைய ஆட்சியை விரிவுபடுத்தினார். எவ்வளவு நாட்டை பிடிக்த்தும் தன்னுடைய வெற்றி ஆசை குறையாத காரணத்தினால், கைலாயத்தையே தன் ஆட்சியின் கீழ் கொண்டு வர வேண்டும் என்ற எண்ணத்தில், கைலாயத்திற்கு செல்லப் புறப்பட்டார் மீனாட்சி தேவி. கைலாயத்தை அடைந்த மீனாட்சி தேவியை, சிவபெருமான் காண்பதற்காக செல்ல, சிவபெருமான் மீனாட்சியின் கண்களை நேருக்கு நேராகப் பார்க்க, அந்த தருணத்தில் சொக்கி விடுகிறார். இதனால் சிவபெருமானுக்கு உண்டான பெயர்தான் சொக்கநாதர். மீனாட்சிக்கும் எம்பெருமானை கண்டவுடன், திருமண ஆசை ஏற்பட்டு விட்டது. அந்த நேரத்தில் மீனாட்சியிடம் ஒரு வாக்கினை அளிக்கிறார் எம்பெருமான். மதுரை மீனாட்சியிடம் சிவபெருமான் கூறியதாவது: ‘வருகின்ற சோமவார தினத்தில் உன் கரத்தினை நான் பிடிப்பேன்’ என்றவாறு கூறினார். அதேபோல் ஒரு சோமவார தினத்தன்று கைலாயத்தில் இருந்து மதுரை வந்த சிவபெருமான், மீனாட்சியை திருக்கல்யாணம் முடித்தார். தேவாதி தேவர்கள் முன்னிலையில் நடந்த இந்த திருக்கல்யாண வைபவம் தான், ஆண்டுதோறும் சித்திரை மாதம் மதுரையில் கோலாகலமாக ‘மீனாட்சி திருக்கல்யாண வைபவமாக’ இதுநாள் வரை நடந்து வருகிறது. குறிப்பாக சிவபெருமான் மீனாட்சியின் திருக்கரங்களை பிடித்த சோமவார தினத்தன்று, இந்த வருடம் திருக்கல்யாண வைபவம் நடைபெறுவதால் இந்த தினத்திற்கு மேலும் சிறப்பு சேர்க்கிறது.
#maduraimeenakshi #meenakshithirukalyanam #maduraimeenakshiamman #madurailive #mythology #vijaytv #lord #mahbharatham #tntrend #madurai #lordshiva