உங்கள் கனவில் என்ன வந்தால் என்ன பலன் தெரியுமா? | Spiritual Meaning Of Dreams | Kanavu Palangal

sathiya 150 25/2/2024
 உங்கள் கனவில் என்ன வந்தால் என்ன பலன் தெரியுமா? | Spiritual Meaning Of Dreams | Kanavu Palangal

பொதுவாக எல்லாக் கனவுகளுக்கும் பலன் உண்டு என்று சொல்லிவிட முடியாது. ஆனால் குறிப்பிட்ட சில நேரங்களில், நாம் ஆழ்ந்த உறக்க நிலையில் இருக்கும்போது வரும் கனவுகளுக்கு நிச்சயம் பலன் உண்டு.நள்ளிரவில் ஒரு மணிக்கு கனவு கண்டால் ஒரு வருடம் கழித்து பலன் கிடைக்கும். இரண்டு மணிக்கு கனவு  கண்டால் மூன்று மாதத்தில் பலன் கிடைக்கும், அதிகாலை கனவு உடனடியாக பலிக்கும் என்று கனவு சாஸ்திரம் கூறுகிறது.

அந்த வகையில் நமது கனவில் வரும் விடயங்களுக்கான பலன்கள் என்ன என்பதை இங்கு தெரிந்து கொள்ளலாம்.

இறந்தவர்கள் கனவில் வந்தால் என்ன பலன்: 
நீங்கள் இறந்து போனவர்களுடன் பேசுவது போல் கனவு கண்டீர்கள் என்றால், உங்களுக்கு பெயரும்,அதிகாரம், பதவி, லாபம் , மிக சிறப்பான புகழும் உண்டாகும் என்பது பொருள்.இறந்தவர்களின் சடலத்தைக் கனவில் கண்டால் சுபநிகழ்ச்சிகள் நடந்தேறும். வானவில்லை கனவில் கண்டால் பணம், செல்வாக்கு அதிகரிக்கும். 

ஒருவருக்கு அவர்களின் இறந்து போன தாய்-தந்தையர் கனவில் தோன்றுவார்களேயானால், கனவு கண்டவருக்கு வர இருக்கும் ஆபத்து அல்லது இடையூறைச் சுட்டிக்காட்டி எச்சரிக்க வந்திருக்கிறார்கள் என்று பொருள். நண்பன் இறந்ததாக கனவு கண்டால் நண்பனின் ஆயுள்  கூடும்.

சிறு குழந்தைகளை கனவில் கண்டால் சுபநிகழ்ச்சிகள் நடந்தேறும்.  


பிறரை அடிப்பது போல் கனவில் வந்தால் என்ன பலன்:
பிறரை அடிப்பது போல் கனவில் வந்தால் என்ன பலன் நாம் பிறரை அடிப்பது போல் கனவு கண்டால், நண்பர்களால் புகழப்படும் நிலை ஏற்படும். மேலும் புதிய நண்பர்கள் கிடைப்பார்கள், புகழ் பன்மடங்கு பெருகும். தான் அடிபட்டு காயமடைந்திருப்பது போல் கனவு கண்டால், தன அபிவிருத்தி உண்டாகும். எனினும் கத்தி, துப்பாக்கியால் சுடப்பட்டு காயமடைந்ததாக கனவு காண்பது நன்மையான பலன் தராது. உங்களுக்கு பழி ஏதேனும் வந்து சேரும். 

நமது கனவில் இறைவன் தெய்வம் கனவில் வந்தால், உங்களுக்கு நன்மையான பலன்களைத் தரும். செய்யும் தொழில், வியாபாரம் முன்னேறும்.வாழ்வில் நீண்ட நாள் திட்டம் நிறைவேறும். புது ஒளி பிறக்கும். மகிழ்ச்சி பொங்கும். நவீன ரக தொழில்களில் ஈடுபாடு உண்டாகும். மக்களுக்கு சேவை புரியும் அறச்செயல்களில் ஈடுபட்டு புகழ் பெற வழிவகை செய்யும். புனித யாத்திரைகள் மேற்கொள்ளும் சூழல் உண்டாகும். அதே நேரம் பாழடைந்த அல்லது தெய்வ விக்ரகம் இல்லாத கோயிலைக் கனவில் காண்பது நல்லதல்ல. அத்தகைய கனவு நீங்கள் முயற்சிக்கும் செயல்களில் தோல்வியும், பொருள் நஷ்டம் போன்ற பலன்களை தரும். 

பிரபலமானோர் அறிமுகம் கனவு பலன்கள்:
பிரதமர், ஜனாதிபதி போன்றோர்களுடன் அறிமுகம் ஆவது போல் கனவு கண்டால், சமூகத்தில் உங்களுக்கு அந்தஸ்தும், மதிப்பும் உண்டாகும். மணமாகாத இளம்பெண்கள் மேற்சொன்ன படி கனவு கண்டால், அவளை மணம் முடிக்க போகும் வருங்கால கணவன்,அப்பெண்ணின் குடும்பத்தைவிட பன்மடங்கு வசதி மிக்கவனாக இருப்பான் என கொள்ளலாம். அரச குடும்பத்தாருடன் பழகுவது போன்ற கனவு வந்தால், உங்களின் நண்பர்கள் மூலமாக பண உதவி கிடைக்கும். 

ஹோம குண்டம் கனவில் வந்தால் என்ன பலன்: உங்கள் கனவில் ஹோமம் எனப்படும் வேள்விக் குண்டம், ஹோமத் தீ முதலானவற்றைக் கண்டால், நீங்கள் தெய்வ அருள் பெற்றவராகி பல்வேறு நற்பேறுகளையும் பெறுவீர்கள் என்பது பொருளாகும்.

திருமண கோலத்தை கனவில் கண்டால், சமூகத்தில் நம்மதிப்பு உயரும். 

சண்டை கனவு பலன்கள்:
அடிதடி, தகராறு, சண்டை சச்சரவுகளில் நீங்கள் சிக்கிக் கொண்டு தவிப்பது போல் கனவு வந்தால், உங்கள் வாழ்க்கை அமைதியானதாக உங்களை சுற்றியிருக்கும் எல்லோருடனும் சுமுக உறவு கொண்டதாக அமையும். சண்டையில், பிறர் நம்மை அடிப்பது போன்று கனவு கண்டால் நமக்கு பகைவர்கள் இல்லை என்று எடுத்து கொள்ளலாம். பகைவர் இருப்பின் அவர்களும் பகை மறந்து உங்களுக்கு நண்பர்களாக மாறும் சூழல் உண்டாகும்.

அழுகை கனவில் வந்தால் என்ன பலன்:
ஒருவர் வாய்விட்டு பலமாக அழுது கொண்டிருப்பது போல் கனவு கண்டால், அவரது வாழ்க்கையில் பல இடையூறுகள் ஏற்படலாம்.

அலுவலகத்தில் பணியாற்றுவதுபோல் கனவு கண்டால்:

நீங்கள் ஏதேனும் ஒரு அலுவலகத்தில் பணியாற்றுவதுபோல் கனவு கண்டால் உங்களுக்கு நற்காலம் நெருங்கி விட்டது என்பதற்கான அறிகுறியாகும்.வேலை இல்லாமல் இருப்பவர்களுக்கு உடனடியாக வேலை கிடைக்கும் என்பதை இது குறிக்கும்.நீங்கள் வேலையிலிருந்து நீக்கப்பட்டுவிட்டது போல் கனவு கண்டால், அவ்வாறே நிஜத்தில் நடக்கலாம். அல்லது நீங்கள் ஏதேனும் நிர்வாகத் தவறுகள் செய்து அதனால் உயரதிகாரிகளின் கோபத்தை சம்பாதிக்க நேரிடும்.வருங்கால உயர்வுகளும் பாதிக்கக்கூடும். தொழில் செய்பவர்கள், அதில் பிரச்னைகள் எழுவதாக கனவு கண்டால், அவர்களின் தொழிலில் சிக்கல்கள் ஏற்படலாம்.

கடலைக் கனவில் கண்டால்:

சிறிது முயற்சி செய்தால் வெளிநாடுகளுக்குப் போவதற்கான வாய்ப்பு எளிதாக கிடைக்கும் என்பதை உணர்த்துகிறது. அல்லது வெளிநாட்டினாருடன் வியாபாரத் தொடர்பு ஏற்பட்டு பெரும் பொருள் ஈட்டுவர். பிற நாட்டின் உறவுடைய அலுவலகங்களில் உங்களுக்கு வேலை கிடைக்கும் எனவும் பொருள் கொள்ளலாம்.

ஆபத்து கனவில் வந்தால் என்ன பலன்:

தற்கொலை செய்து கொள்வதை போல் கனவு  கண்டால் நெருங்கி வந்த ஆபத்துகள் நீங்கி, நன்மை பிறக்கும்.உங்களுக்கு ஏதேனும் ஆபத்து, தொல்லைஏற்படுவதாக கனவு கண்டால், பலன் அதற்கு நேர்மாறாக வாழ்க்கை மகிழ்ச்சியானதாக, நிம்மதியுடையதாக அமையும்.

எலுமிச்சை பழத்தைக் காண்பது நல்லது, தனக்கு ஒருவர் கொடுப்பதாகக் கண்டால் திழிலில் விருத்தி, சகல பாக்கியங்களும்  பெருகும்.