திருச்செந்தூர் முருகன் மாசித்திருவிழா 2024 தேதிகள் அட்டவணை | tiruchendur masi festival

sathiya 541 12/2/2024
 திருச்செந்தூர் முருகன் மாசித்திருவிழா 2024 தேதிகள் அட்டவணை | tiruchendur masi festival

அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயில், திருச்செந்தூர் மாசி திருவிழா 2024 
 

முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் 2-ம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் மாசித்திருவிழா நாளை புதன்கிழமை(14-02-2024) கொடியேற்றத்துடன் தொடங்கி 12 நாட்கள் வெகு விமரிசையாக நடக்கிறது.

கொடியேற்றத்தை முன்னிட்டு அன்று கோவில் நடை அதிகாலை 1 மணிக்கு திறக்கப்பட்டு, 1.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனை, 2 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகம் நடக்கிறது. பின்னர் காலை 4.30 மணிக்கு கோவில் செப்பு கொடிமரத்தில் மாசித்திருவிழா கொடியேற்றம் நடக்கிறது. பின்னர் கொடி மரத்திற்கு பல்வேறு திரவியங்களால் அபிஷேகம், அலங்காரமாகி மகா தீபாராதனை நடக்கிறது. தொடர்ந்து மற்ற கால பூஜைகள் நடக்கிறது.

திருவிழாவின் முக்கிய நாளான 5-ம் திருநாள் 18-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) இரவு 7.30 மணிக்கு ஆனந்தவல்லி அம்பாள் சமேத சிவகொழுந்தீஸ்வரர் கோவிலில் சுவாமிக்கும், அம்பாளுக்கும் குடவருவாயில் தீபாராதனை நடக்கிறது.

7-ம் திருநாளான 20-ந் தேதி அதிகாலை 1 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு, 1.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனையும், 2 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகமும், தீபாராதனையும் நடக்கிறது. 4.30 மணிக்கு உருகு சட்டசேவை நடக்கிறது. காலை 8.45 மணிக்கு சுவாமி சண்முகர் வெற்றி வேர் சப்பரத்தில் எழுந்தருளுகிறார். மாலை 4.30 மணிக்கு சுவாமி சண்முகர் தங்க சப்பரத்தில் சிவப்பு சாத்தி கோலத்தில் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சி கொடுக்கிறார்.

8-ம் திருநாள் அதிகாலை சுவாமி சண்முகர் வெள்ளி சப்பரத்தில் வெள்ளை சாத்தி கோலத்தில் எழுந்தருளி வீதி உலா வருகிறார். அன்று பகல் 11 மணிக்கு சுவாமி சண்முகர் பச்சை நிற கடைசல் சப்பரத்தில் பச்சை சாத்தி கோலத்தில் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சி கொடுக்கிறார்.

விழாவின் சிகர நிகழ்ச்சியான 10-ம் திருநாளான 23-ந் தேதி தேரோட்டம் நடக்கிறது. அன்று காலை 6.30 மணிக்கு விநாயகர், சுவாமி, அம்பாள் தனித்தனி தேர்களில் எழுந்தருளி வெளி வீதி நான்கிலும் பவனி வந்து பக்தர்களுக்கு காட்சி கொடுக்கின்றனர். 11-ம் திருநாளான 24-ந் தேதி தெப்பத்திருவிழா நடக்கிறது. அன்று இரவு 10.30 மணிக்கு மேல் சுவாமியும், அம்மாளும் 11 முறை தெப்பத்தில் சுற்றும் தெப்ப உற்சவம் நடக்கிறது.

🚩#திருச்செந்தூர் அருள்மிகு ஸ்ரீ சுப்ரமண்ய சுவாமி திருக்கோவில் மாசி திருவிழா2024 🔥
💥திருச்செந்தூர் மாசி திருவிழா பிப்ரவரி 14 முதல் பிப்ரவரி 25, 2024 வரை 12 நாட்கள் நடைபெறுகிறது. சிவப்பு சாத்தி, பச்சை சாத்தி  - திருச்செந்தூர் #மாசிமகம் தேரோட்டம்💥  

தேதிகள் அட்டவணை கீழே கொடுக்கப்பட்டுள்ளது.


பிப்ரவரி 13 , 2024 - செவ்வாய்
மாலை: 4.30 மணி - கோயில் யானை மேல் #கொடிபட்டம் வீதி உலா
14 பிப்ரவரி 2024 - புதன் - நாள் 1 - மாசி உற்சவரம்பம்
காலை: 4.30 மணி முதல் 5 மணி வரை - மகர லக்னம் - 🚩#கொடியேற்றம்
மாலை: 4.30 மணி - ஸ்ரீ #அப்பர் சுவாமிகள் தங்க சப்பரம் - திருவீதி உழவர் பணி.
இரவு: 7 மணி - ஸ்ரீ #பெலிநாயகர் தந்த பல்லக்கில் #அஸ்திரதேவர் உடன் உலா
15 பிப்ரவரி , 2024 - வியாழன் - நாள் 2
காலை: 10.30 மணி - சிங்க கேடய சப்ரம் ; அம்பாள் சிறிய பல்லக்கு
இரவு: 7 மணி - #சிங்ககேடய சப்ரம் ; அம்பாள் #பெரியகேடய சப்பரம்
16 பிப்ரவரி , 2024 - வெள்ளி - நாள் 3
காலை: 7 மணி - பூங்கோயில் சப்பரம் -கேடயம் சப்பரத்தில் அம்பாள் ;
மாலை / இரவு: 6.30 மணி - #தங்கமுத்துகிடா வாகனம் - அம்பாள் வெள்ளி #அன்னவாகனம்
17 பிப்ரவரி 2024 - சனி - நாள் 4
காலை: 7 மணி - தங்க முத்து கிடா வாகனம்; அம்பாள் வெள்ளி அன்ன வாகனம்
மாலை / இரவு: 6.30 pm - #வெள்ளியானை , அம்பாள் #வெள்ளிசரபவாகனம்
பிப்ரவரி 18 , 2024 - ஞாயிறு - நாள் 5
காலை: 7 மணி - வெள்ளியானை , அம்பாள்  வெள்ளி சரப வாகனம்
இரவு: 7.30 மணி - மேலக்கோவில் #குடவருவாயில்தீபாராதனை - தங்க மயில் வாகனம்.
19 பிப்ரவரி 2024 - திங்கள் - நாள் 6
காலை: 7 மணி - கோ ரதம் ;
இரவு: 8 மணி - வெள்ளி தேர் , அம்பாள் இந்திர விமானம்
பிப்ரவரி 20 , 2024 - செவ்வாய் - நாள் 7
அதிகாலை: 4.30 மணி முதல் 5 மணி வரை - மகர லக்னம் - ஸ்ரீ சண்முகர் #உருகுசட்டசேவை
காலை: 5.30 மணிக்கு மேல் - ஸ்ரீ குமரவிடங்கப் பெருமான் பல்லக்கு
காலை: 8.30 மணி - #வெட்டிவேர் சப்பரத்தில் ஆறுமுக நயினார்
மாலை: 4.30 மணிக்கு பிறகு - தங்க சப்பரத்தில் #சிவப்புசாத்தி❤️
பிப்ரவரி 21 , 2024 - புதன் - நாள் 8
காலை: 5 மணி - பெரிய வெள்ளி சப்பரத்தில் #வெள்ளைசாத்தி 🤍;
மதியம்: காலை 10.30 மணிக்குப் பிறகு - #பச்சைசாத்தி 💚சப்பரம்
- ஸ்ரீ குமரவிடங்கப் பெருமான், ஸ்ரீ #அலைவாயுகந்தப்பெருமான் வெள்ளி குதிரை வாகனம்
22 பிப்ரவரி , 2024 - வியாழன் - நாள் 9
காலை: 7 மணி - பல்லக்கு
இரவு: 8 மணி - #தங்ககைலாயபர்வதம் , வெள்ளி கமலம் வாகனத்தில் அம்பாள்
இரவு: 10 மணி - தேர் கடாக்ஷம்
23 பிப்ரவரி , 2024 - வெள்ளி - நாள் 10
காலை: 6.30 முதல் 7.00 வரை - கும்ப லக்னம் - ரதம் #தேரோட்டம்
இரவு: 7.30 மணி - பெரிய திருப்பல்லக்கு
24 பிப் , 2024 - சனி - நாள் 11
இரவு: 7 மணி - புஷ்ப சப்பரம் - தெப்பக்குளம் மண்டகபாடி சேர்தல்
இரவு: 10.30 மணிக்கு பிறகு -அபிசேகம், அலங்காரம் - #தெப்பஉற்சவம்.
(11 சுற்று வருதல் அதாவது தெப்பத்தில் 11 சுற்று) - மேலக்கோவில் சேர்தல்
பிப்ரவரி 25 , 2024 - ஞாயிறு - நாள் 12
மாலை: 4.30 மணி - மஞ்சள் நீராடல்
இரவு: 9 மணி - மலர்கேடய சப்பரத்தில் சுவாமி அம்பாள் - திருக்கோவில் சேர்தல்

🦚 குறிப்பு:
- ஸ்ரீ #குமரவிடங்கப்பெருமான் ஸ்ரீ #தெய்வானை அம்மனுடன் 2ம் நாள் முதல் 12ம் தேதி வரை ஸ்ரீ #விநாயகர், #திருஞானசம்பந்தர், #திருநாவுக்கரசர், #சுந்தரர், #மாணிக்கவாசகர், சண்டிகேஸ்வரர் ஆகியோருடன் திருவீதி வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.
- 12 நாள் திருவிழாவின் போது பல்வேறு மண்டபம், மண்டகபாடியில் அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடைபெறும்.
- ஸ்ரீ #ஜெயந்திநாதர் 2-ஆம் நாள் முதல் 10-ஆம் நாள் வரை பகலில் தங்கச் சப்பரத்திலும் , இரவில் வெள்ளிச் சப்பரத்திலும் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.

#முருகாசரணம் 
#MurugaSaranam 
#tiruchendurmasifestival2024 
#திருச்செந்தூர்மாசித்திருவிழா2024 
திருச்செந்தூர் முருகன் கோவில்