|  | 
			| 
    
        "வாழ்க்கை என்றாலே துன்பங்களும் துயரங்களும்
இருக்கத் தான் செய்யும்.
அது தான் நியதி என்பதை உணர்ந்து கொள்ளுங்கள்."
     — புத்தர்(Buddha) | 
			| 
    
        "நீ செய்த செயல்கள் ஒவ்வொன்றும்
உன் நிழல் போல உன்னை தொடர்ந்து
வந்து கொண்டே இருக்கும்.
அது நல்லதா இருந்தாலும் சரி
கெட்டதாக இருந்தாலும் சரி."
     — புத்தர்(Buddha) | 
			| 
    
        "நமது உதடுகளை அரண்மனை வாயிற்
கதவுகளைப் போல பாதுகாக்க வேண்டும்.
நமது வாயிலிருந்து வெளிப்படும்
ஒவ்வொரு சொல்லும் சாந்தமானதாகவும்
இதமாகவும் இருக்க வேண்டும்."
     — புத்தர்(Buddha) | 
			| 
    
        "நம் எண்ணங்கள் யாவும், பிறருக்கு எந்த வகையிலும்
துன்பம் தருவதாக இருக்கக்கூடாது.
பிறருக்கு நன்மையையும்  ஆறுதலையும் தரக்கூடியதாக இருக்கவேண்டும்."
     — புத்தர்(Buddha) | 
			| 
    
        "போரில் ஆயிரம் பேரை வெல்வதை
காட்டிலும் சிறந்தது
உன் மனதை நீ வெற்றி கொள்வது."
     — புத்தர்(Buddha) | 
			| 
    
        "செல்வத்தின் இயல்பு வளர்வதும் தேய்வதும்.
செல்வம் என்றைக்கும் ஒரு இடத்தில்
நிலைத்திருப்பது கிடையாது."
     — புத்தர்(Buddha) | 
			| 
    
        "ஒருவன் என்னை இகழ்ந்து பேசினான்.
ஒருவன் என்னை அடித்தான்.
என்று அடுத்தவனைப்பற்றியே
ஒருவன் நினைத்துக் கொண்டிருந்தால்
அவனுடைய கோபம் ஒருபோதும் தணியாது."
     — புத்தர்(Buddha) | 
			| 
    
        "ஒன்றும் தெரியாது என்று
நினைப்பவனுக்கு கொஞ்சமாவது அறிவு உண்டு.
ஆனால், எல்லாம் தெரியும் என்று
நினைப்பவன் முழு மூடன்."
     — புத்தர்(Buddha) | 
			| 
    
        "மூடனை பிறர் அழிக்க வேண்டியதில்லை.
அவன் தன்னைத் தானே அழித்துக்கொள்கிறான்."
     — புத்தர்(Buddha) | 
			| 
    
        "அமைதியாய் இருப்பவன்
முட்டாள் என்று எண்ணிவிடாதே.
பேசுபவனை விட கேட்பவனே புத்திசாலி."
     — புத்தர்(Buddha) | 
			|  | 
			|  | 
			|  | 
			|  | 
			| 
    
        "இரத்தம் வராமல் ஒருவரை கொன்றுவிடும்
கூர்மையான ஆயுதம் மனிதனின் நாக்கு."
     — புத்தர்(Buddha) | 
			| 
    
        "மகானை போல நீ வாழ வேண்டும் என்றில்லை
மனசாட்சியின் படி வாழ்ந்தாலே போதும்."
     — புத்தர்(Buddha) | 
			| 
    
        "எண்ணங்கள் ஈடேற வேண்டும் என்றால்
நல்ல எண்ணங்களை மட்டுமே விதைக்க கற்றுக்கொள்."
     — புத்தர்(Buddha) | 
			|  | 
			|  | 
			| 
    
        "நிம்மதிக்கான இரண்டு வழிகள் விட்டுக்கொடுங்கள்
இல்லையேல் விட்டுவிடுங்கள்."
     — புத்தர்(Buddha) | 
			|  |